ஜீப்ரா – விமர்சனம்!

ஜீப்ரா – விமர்சனம்!

ரே சாயலில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சகஜம்தான் என்றாலும் வெள்ளித்திரையில் மட்டும் அடிக்கடி ஒரே ஜாடை எனப்படும் கதைக் கருவில் இரண்டு படங்கள் வருவது சகஜமாகி விட்டது. அந்த வகையில் அண்மையில் ரிலீஸாகி கவனம் ஈர்த்த லக்கி பாஸ்கர் கையாண்ட அதே சப்ஜெக்ட் ஸ்டைலில் சிலபல வங்கிகளில் கோடிக்கணக்கில் எப்படி மோசடி நடக்கிறது என்பதை சத்தியதேவ் மூலமாக ஜீப்ரா படம் மூலம் டைரக்டர் புட்டு புட்டு வைத்திருக்கிறார். இப்படி எல்லாம் கூட வங்கியில் தில்லுமுல்லு செய்யலாமா என்று யோசிக்க வைத்து அதை திரைக்கதையில் இணைத்து பக்காவாக நகர்த்தி இருக்கும் இயக்குனர் எப்படி எல்லாம் யோசித்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட வைக்கிறார்.அதே சமயம் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனையை செல்போனிலேயே டீல் செய்வதெல்லாம் நம்ப முடியாத காட்சிகள். 10 லட்ச ரூபாய்க்கு மேல் பண பரிமாற்றம் செய்வதென்றாலே கணக்கு வைத்திருக்கும் நபர் வங்கிக்கு நேரில் வரவேண்டும் என்ற விதிமுறையில் இருக்கும் நிலையில் இருந்த இடத்திலிருந்து கோடிகளை செல்போன் மூலம் வரவு வைப்பதும், அனுப்பி வைப்பதுமாக ஏதோ பஜாரில் கத்திரிக்காய் வாங்கி கைமாற்றி விடுவதை சர்வசாதாரணமாக செய்து தலை சுழல வைக்கிறது.

ஆம்.. எஸ்.என்.பால சுந்தரம், எஸ்.என்.ரெட்டி, தினேஷ் சுந்தரம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கியுள்ள படம் ஜீப்ரா. நடிகர் சத்யதேவ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பேங்கிங் சம்பத்தப்பட்ட குற்றங்களின் பின்னணியில் க்ரைம் த்ரில்லர் வடிவில் படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் கன்னட நடிகர் டாலி தனஞ்சயவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு மொழியில் உருவான இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சத்யதேவ், டாலி தனஞ்சயா தவிர ஜீப்ரா படத்தில் சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுனில் வர்மா, சத்யா அகல, ஜெனிஃபர் பிசினாடோ, அம்ருதா ஐயங்கார் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை என்னவென்றால் பேங்க் ஸ்டாப்பான ஹீரோ சத்ய தேவ், இன்னொரு பேங்கில் ஒர்க் செய்யும் தனது காதலி பிரியா பவானி சங்கரை ஒரு பிரச்சனையில் இருந்து காப்பாற்றுவதற்காக மோசடியாக ரூ.4 லட்சத்தை வேறு ஒருவர் வங்கி கணக்கில் இருந்து எடுக்க, அதே வங்கி கணக்கில் இருக்கும் ரூ.5 கோடியை சத்ய தேவ் பெயரில் மற்றொருவர் மோசடி செய்து எடுத்து விடுகிறார். அந்த 5 கோடி ரூபாயால் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் சத்ய தேவ், அதில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட, அதை அடுத்து நிகழ்வதென்ன? அவரது பெயரை பயன்படுத்தி அந்த பணத்தை எடுத்தது யார்? என்பதை வேகமாகவும், விவேகமாகவும் சொல்வது தான் ‘ஜீப்ரா’.

ஹீரோ சத்யதேவ் ஒரு மிகப்பெரிய புத்திசாலியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பாக கொடுத்து சட்டுல் ஆன நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். படத்திற்கு வில்லன் என்று சொல்வதை விட இன்னொரு நாயகன் என்று சொல்லலாம் அந்த அளவு நாயகனுக்கு மிக ஈகுவல் என்பதை தாண்டி கிட்டத்தட்ட நாயகனாகவே இந்த படத்திற்கு மாறி இருக்கிறார் கன்னட நடிகர் தாலி தனஞ்செயா. இவரின் வெறித்தனமான தெறிக்கவிடும் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவருக்கும் சத்தியதேவுக்கும் ஆன கேட் அன் மவுஸ் கேம் மிகச் சிறப்பாக அமைந்து படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. வழக்கமான நாயகியாக அறிமுகமாகி போக போக கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் மிக முக்கியமான திருப்புமுனையாகவும் மாறி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். இந்த கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து முக்கியமான நாயகியாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

கேமராமேன் சத்யா பொன்மர் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதாபாத்திரங்களை ஸ்டைலிஷாகவும் காட்டியிருக்கிறார்.எளிய மக்கள் புரிந்துக்கொள்ள முடியாத திரைக்கதை என்றாலும், அதை மிக நேர்த்தியாக தொகுத்து புரிய வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அனில் கிரிஷ்.

எழுதி இயக்கியிருக்கும் ஈஷ்வர் கார்த்திக், வங்கிகளில் நடக்கும் மோசடிகளை வெளிக்காட்டிய விதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. அதிலும், பயன்படுத்தாத கணக்குகளில் இருக்கும் பணத்தை வங்கி அதிகாரிகள் நினைத்தால் கைப்பற்றலாம் என்பதை விவரிக்கும் காட்சி செம.அதே சமயம் சர்வ சாதாரணமாக வங்கியில் கோடிக்கணக்கான ரூபாயை தில்லு முல்லு செய்வதும், அதை டிஜிட்டல் ட்ரான்ஸ்பர் செய்து வேறு ஒருவருக்கு அனுப்புவதும் என ஜம்போ சைஸ் ஊழல்கள் அதிர்ச்சியை தந்தாலும் இதெல்லாம் நடக்கக்கூடிய செயலா என்ற ஒரு சந்தேகம் ஏற்படாமல் இல்லை.

மொத்தத்தில் இந்த ஜீப்ரா- நாட் பேட்

மார்க் 2.25/5

error: Content is protected !!