பராரி – விமர்சனம்!

பராரி – விமர்சனம்!

மிழ்நாட்டில் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, குடிநீர்தொட்டியில் மனித கழிவை கலப்பது. போன்ற கொடுமைகளும் நிகழ்கின்றன.பட்டியலினத்தவர் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது உள்ளிட்ட தீண்டாமைகள் இன்றும் உள்ளன. தீண்டாமை கொடுமையும் ஒழியவில்லை. இச்சூழலில் உள்ளூரில் சாதியை வைத்து பாகுபாடு, மாநிலத்தில் இனத்தை வைத்து பாகுபாடு, என்று இந்தியா முழுவதும் சாதி, மதம், மொழி ஆகியவற்றின் பேரில் நடக்கும் வன்கொடுமைகளை வைத்து பராரி என்ற டைட்டிலில் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் டைரக்டர் கிளைமாக்ஸ் காட்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் இதயங்களை கனக்கச் செய்துவிடுகிறார். படத்தின் முதல் பாதியில் காட்டப்படும் சாதி ரீதியிலான பிரச்சனைகளில் சில விஷயங்கள் திணித்தது போல் இருப்பது படத்தின் குறையாக இருந்தாலும், இரண்டாம் பாதி அந்த குறைகளை மறக்கடித்து, சாதி ரீதியிலான பிரச்சனைகளின் பின்னணியில் இருக்கும் அரசியலை யோசிக்க வைத்து விடுகிறது.

கதை என்னவென்றால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அருகே உள்ள கிராமத்தில் சாலைக்கு ஒரு புறத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் நாயகன் ஹரி சங்கர் மறுபுறம் வேறு சமூகத்தை சேர்ந்த நாயகி சங்கீதாவும் வாழ்ந்து வருகிறார்கள். அதே கிராமத்தில் இருவரும் கரும்பு வெட்டும் வேலை பார்த்து வருகிறார்கள். சிறு வயதில் இருந்தே நாயகனை ஒரு தலையாக காதலித்து வருகிறார் நாயகி சங்கீதா இதே ஊரில் பாறையை மையமாக வைத்து நடக்கும் சண்டை, தண்ணீர் தொட்டி பிரச்சனை இரு ஊருக்கும் நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் ஜூஸ் நிறுவனத்திற்கு இரு சாதியினை சேர்ந்த மக்களும் 3 மாத வேலைக்காக செல்கின்றனர். இதே சமயம் ஹீரோ ஹரி சங்கரை மற்றொரு வகுப்பைச் சேர்ந்த ப்ரேம்நாத் கர்நாடகாவில் உள்ள ஜூஸ் பேக்டரியில் வைத்து தீர்த்து கட்ட நினைக்கிறார். இதே பேக்டரியில் கன்னட வெறியர்கள் சிலர் பணிபுரிகின்றனர். ஒரு சமயம் நாயகியிடம் தவறாக நடக்க நினைக்கையில் நாயகன் அதை தட்டி கேட்கிறார். இதனால் கன்னட வெறியர்களுக்கும் நாயகனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் நாயகியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இறுதியில் நாயகன் ஹரி சங்கர் கன்னட வெறியர்களிடம் இருந்து நாயகி சங்கீதாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’பராரி’

ஹீரோவாக நடித்திருக்கும் ஹரிசங்கர், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு என்பதை தோற்றத்தில் மட்டும் இன்றில் நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். அப்பாவி கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஹரிசங்கர், மோதல்களை விரும்பாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாலும், தன் ஊரைச் சேர்ந்த பெண்ணிற்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக ஆக்ரோஷம் காட்டும் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் தன் நடிப்பு மூலம் மக்கள் மனதில் தங்கிவிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் சங்கீதா கல்யாண், எளிமையான முகம், வலிமையான நடிப்பு என்று ஸ்கோர் செய்கிறார். வில்லனாக நடித்திருக்கும் புகழ் மகேந்திரன், பிரேம்நாத்.வி, சாம்ராட் சுரேஷ், குரு ராஜேந்திரன், ராஜு, பிரேம்நாத் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் புதியவர்களாக இருந்தாலும் அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பர்ஃபெக்ட்.

எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி, மக்களிடையே இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கான அரசியல் பின்னணியை தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதனால் ஆதாயம் தேடுபவர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார். சமூகத்தில் நிலவும் கசடுகளை தொடர்ந்து பேச வேண்டும் அந்த வகையில் இப்படத்தை பாராட்டவே வேண்டும்

மார்க் 3/5

error: Content is protected !!