“யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழாச் செய்திகள்!

“யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழாச் செய்திகள்!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் மகேஷ்:

எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும் தேவ் நடிகர்களாக இல்லாமல் எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார்கள். எனக்குப் பலமாக இருந்து உதவிய அனைவருக்கும் நன்றி. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் சார் நிறைய அறிவுரைகள் தந்தார். Generous Entertainment நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. செப்டம்பர் 12 அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.

ஒளிப்பதிவாளர் சூரஜ்:

நன்றி சொல்வதைத் தவிர ஏதும் தோன்றவில்லை. நானும் இயக்குநர் சாமும் கல்லூரி முதலே நண்பர்கள், இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி, நன்றாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். படம் பாருங்கள், அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர்:

கடவுளுக்கு நன்றி. நல்ல மனிதர்களோடு சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு படத்தில் ஆறு பாடல்கள் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். என் சவுண்ட் இன்ஜினியர் கிபிக்கு நன்றி. என்னோடு வேலை செய்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். நன்றி.

மாஸ்டர் ரகு:

நான் மாஸ்டராக கார்டு வாங்கிய பிறகு செய்த முதல் படம் இது. எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இசையமைப்பாளர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். சூரஜ் சார் இந்தப்படத்தில் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். தேவ் மிகப்பெரிய உழைப்பாளி. என்னோடு உழைத்த டான்சர்களுக்கும் நன்றி.

ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி:

இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் சாம் சார் மற்றும் மகேஷ் சாருக்கு நன்றி. படம் மிக அற்புதமாக வந்துள்ளது. கண்டிப்பாக நீங்கள் திரையில் ரசிப்பீர்கள். சமுத்திரக்கனி அண்ணாவின் நிமிர்ந்து நில் படத்தில் நானும் சாமும் வேலை பார்த்துள்ளோம். இப்போது நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம் என்று சொல்வதில் பெருமை. இப்படத்தில் அத்தனை நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

எழுத்தாளர் ராம்ஸ் முருகன்:

இது என் நண்பனின் படம் என்பதில் பெருமை. சமுத்திரக்கனி சார், அமீர் சார் வந்திருப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மகேஷ் அவரைப் பார்த்தால் அவர் தயாரிப்பாளர் போலவே தெரியவில்லை, நண்பராகவே இருந்து வருகிறார். இப்படத்தை மிகுந்த உழைப்பில் உருவாக்கியுள்ளோம். அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

VJ நிக்கி:

நான் நிறைய மேடைகளில் தொகுப்பாளராக இருந்துள்ளேன். பத்திரிக்கையாளனாக இருந்துள்ளேன். அங்கிருந்து இன்று இங்கு வந்திருப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம். மிகப்பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஒரு நாள் கால் வந்து, “நீதான் ஹீரோ, ஆபீஸ் வா” என்றார்கள். நான் பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் செகண்ட் லீட் என்று சொல்லி ஷூட்டிங் கூப்பிட்டுப் போய் விட்டார்கள். அங்கு ஆகாஷ் பிரேம், திவாகர், யுவராஜ் எல்லோரிடமும் நீ தான் செகண்ட் லீட் என்று சொல்லி இருந்தார்கள். நான் படம் நடிக்கிறேன் என்பதை என் அப்பாவே நம்பவில்லை. இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. படம் சூப்பராக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகர் ஹார்ட் பீட் கிரி:

இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. “You Only Live Once” என்பதுதான் யோலோ. தலைப்பே சிறப்பாக உள்ளது. நண்பர்களாகப் பெரிய ஆளுமைகள் வாழ்த்த வந்துள்ளதில் மகிழ்ச்சி. சாம் சார் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

Generous Entertainment சார்பில் கோகுல்:

இப்படத்தை வெளியிடும் உரிமையை Generous Entertainment நிறுவனத்திற்குத் தந்ததற்கு நன்றி. மகேஷ் சார் இப்படத்தை தயாரித்து உழைத்ததைப் பற்றிப் பேசினார். புது முகங்களை நம்பி வாய்ப்பு தந்த இந்த குழுவிற்கு பத்திரிக்கையாளர்கள் முழு ஆதரவு தர வேண்டும். தேவ் சினிமாவில் பல வருடங்களாக இருக்கிறார். இப்போது தான் ஹீரோவாக மாறியுள்ளார். மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் ஆகாஷ் பிரேம்:

படத்தில் மதன் கேரக்டருக்கு நான் சரியாக இருப்பேன் என்று நம்பி என்னை அழைத்த உதவி இயக்குநர் ஸ்டீபன் சாருக்கு நன்றி. அவர் வார்த்தையை நம்பி எனக்கு வாய்ப்பு தந்த சாம் சார், மகேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் மிகச்சிறந்த தயாரிப்பாளராக வருவார். ஒரு வருடத்திற்கு முன் இப்படத்திற்குப் பூஜை போட்டோம். இப்போது படம் முடிந்து வந்துவிட்டது. இந்த திட்டமிடல் சினிமாவில் மிகப்பெரிய விஷயம். இந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்களை அழகாக காட்டிய சூரஜ் சாருக்கு நன்றி. இப்படத்தில் நான் ஒரு பாடலும் பாடியுள்ளேன். அந்த வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் சாருக்கு நன்றி. வயலண்ட் படங்களுக்கு மத்தியில் உங்களை ஆச்சரியப்படுத்தும் படமாக இது இருக்கும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் படவா கோபி:

2009 லேயே என்னை நடிகனாகச் செதுக்கி இப்போது ஸ்கூல் பஸ் படத்திலும் வாய்ப்பு தந்த சமுத்திரக்கனி சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் நான் முதலில் காமெடி தான் செய்வதாக இருந்தேன், ஆனால் சாம் தான் என்னை ஹீரோயின் அப்பாவாக நடிக்க வைத்தார். என்னுடைய மகள் 5 வயதில் இருந்தபோது தவறிவிட்டார். ஆனால் டீனேஜில் மகள் என்ன செய்வார் என்பதை இப்படம் மூலம் அனுபவித்தேன். இப்படத்தின் ஷூட் அவ்வளவு ஜாலியாக இருந்தது. சாம், ராம் இருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார்கள். செப்டம்பர் 12 படம் வருகிறது ஒரு இளமை கொண்டாட்டம். அனைவரும் பார்த்து ரசிக்கவும். நன்றி.

நடிகை தேவிகா:

நான் தமிழில் செய்யும் முதல் படம் யோலோ. இதற்கு முன் ஒரு சீரிஸ் செய்திருந்தேன். இப்பட வாய்ப்பு தந்த சாம் சாருக்கு நன்றி. சமுத்திரக்கனி சாரின் தெலுங்கு படத்தில் நடித்த போது, சாம் சார் பார்த்து இந்த வாய்ப்பை தந்தார். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் மிக அருமையாக வந்துள்ளது. செப்டம்பர் 12 எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள். நன்றி.

நடிகர் தேவ்:

இந்த வாய்ப்பு வரக் காரணமாயிருந்த அரவிந்த் பிரதருக்கு நன்றி. அவர் தான் இப்படத்திற்கு ஆள் தேடுகிறார்கள் என என்னை அனுப்பினார். கதை கேட்டேன், ரொம்ப பிடித்தது. என்னைத் தேர்ந்தெடுப்பார்களா என சந்தேகம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் போன் செய்து, “புதுமுகம் தான் வேண்டும், நீங்கள் பொருத்தம்” என்று சொன்னார். மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மொத்த டீமுக்கும் சுதந்திரம் தந்தார். சாம் சார் பக்காவாக திட்டமிட்டு உழைத்தார். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. என்னை இப்படிப் பார்க்க ஆசைப்பட்ட என் அப்பா, அம்மா, மாமா மூவரும் இல்லை. அவர்களின் ஆசிர்வாதத்தில்தான் இது நடந்துள்ளது. செப்டம்பர் 12 யோலோ திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.

இயக்குநர் சாம்

முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி. அவர்களால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன்.அமீர் சார் ஒரு சிங்கம் மாதிரி. அவருடன் வேலை செய்வது சவாலானதாக இருந்தது. அவர் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கக் கூடாது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவரால்தான் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க தைரியம் வந்தது. நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அமீர் சாரும், கனி சாரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் எனக்கு இப்போதுவரை நிறைய உதவி செய்திருக்கிறார்கள்.கனி சார் எந்த ஒரு நொடியையும் வீணாக்க மாட்டார். அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன். “எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என்பார். அவர் இந்தப் படத்திற்குப் பெரிய ஆதரவாக இருந்தார். எங்கள் அழைப்பை மதித்து வந்த ஆர். கே. செல்வமணி சாருக்கு நன்றி. எனக்கு இப்பட வாய்ப்பை தந்த மகேஷ் சாருக்கு நன்றி. அவர் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தார். அதுபோலவே தேவை லீடாக அறிமுகப்படுத்தினார்.

ஆகாஷ் ஒரு அப்பாவி பையனாக நன்றாக நடித்துள்ளார். பலரைத் தேடி கடைசியாக தேவிகாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்என் நண்பன் ராம் கல்லூரியிலிருந்தே ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். இன்ஸ்டிடியூட்டில் சூரஜ் உடன் பணிபுரிந்திருக்கிறேன். நான் கேட்டதைச் சிறப்பாகச் செய்து தந்துள்ளார்.சகிஷ்னா இந்தப் படத்தில் 6 வெவ்வேறு பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.எடிட்டர் ரமேஷ் நேரடியாக வந்து எனக்கு உதவினார். தயாரிப்பில் நாகராஜ் புரொடக்ஷன் மேனேஜர் பெரிய ஆதரவாக இருந்தார்.என் உதவி இயக்குநர்கள் குழு என்னைவிட வேகமாக இருப்பார்கள். ரகு மாஸ்டர், டேஞ்சர் மணி மாஸ்டர் இருவருக்கும் நன்றி.பாடலாசிரியர்கள் சூப்பர் சுப்பு, முத்தமிழ், சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ் இவர்களின் வரிகள் படத்துக்கு வலு சேர்த்துள்ளன. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படவா கோபி பெரிய ஆதரவாக இருந்தார். நன்றி. இது இளமையான எண்டர்டெயின்மென்ட் படம். நிச்சயம் படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தும். YOLO” செப்டம்பர் 12 அன்று திரைக்கு வருகிறது.மீடியா நண்பர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். நன்றி.

இயக்குநர், நடிகர் சமுத்திரகனி

இறைவனுக்கு நன்றி. மிக மகிழ்ச்சியான தருணம். என் படத்தை விட அதிக சந்தோசமாக உள்ளது.அமீர் அண்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும். பருத்திவீரன் படத்தில் தான் நானும் சாமும் சந்தித்தோம். அமீர் அண்ணன் எங்களிடம் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தினார். சாமுக்கும் எனக்கும் இனிமையான பயணம். அண்ணனிடமிருந்து வந்த பிறகு “இவனை விட்டு விடக்கூடாது” என நினைத்து என்னுடன் இணைத்துக் கொண்டேன். அவன் எனக்காக நிறையச் செய்துள்ளான். இந்த மேடை அவனுக்கு ரொம்ப லேட்டாக கிடைத்துள்ளது. அதனால் இந்தப் படத்திற்காக அவனுடன் நிற்க வேண்டும் என நினைத்தேன். இந்தப் படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். ஏனெனில் அவ்வளவு உழைப்பைச் செய்திருக்கிறார்கள். படத்தில் உண்மையும், உணர்வும் இருக்கிறது. தேவ் கவலைப்படாதீர்கள், உங்கள் அப்பா அம்மா மாமா ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு. அவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நண்பன் மகேஷ் இந்தக் குழுவின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

படத்தின் குறிப்பு

நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு வாழ்க்கையில் நடந்தால் அதுவே இந்தப் படத்தின் ஃபேண்டஸி மையம். மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான காதல் திரைப்படமாகவும், இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாகவு ம், ரொம்-காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்மென்ட்டாகவும் இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S. சாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!