32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2509)
நெல்சன் மண்டேலா உடல்  நல்லடக்கம்: Running News

நெல்சன் மண்டேலா உடல் நல்லடக்கம்:

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிற வெறிக்கு எதிராகப் போராடிய தலைவருமான நெல்சன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த கிராமமான குனுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.மண்டேலா தெம்பு இனத்தவரைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது குல வழக்கப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. மண்டேலா சாதனைகள், அவரது வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை நினைவு கூரும் பாடல்களை அவர்கள் பாடி அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கின்போது குல மரபுப்படி எருமை பலி கொடுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் […]

December 15, 2013 admin
“விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்! Running News

“விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்!

கடந்த ஆடி ஆவணி மாத காலகட்டத்தில் அமெரிக்க திரைப்பட கலைஞர் சுகிர் பொன்ச்சாமி தனது குழுவுடன் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தின் தெற்கே உள்ள தேவிபுரம் எனும் ஒரு சிறிய கிராமத்துக்குச் சென்றார். அவர்கள் அங்கே உள்ள திரை தொழிலாளிகளுடன் சேர்ந்து விடுதலையின் பாதையில் எனும் படத்தை தயாரிக்க திட்டமிடடிருநதனர். இந்த விடுதலையின் பாதைக்கும் ஆந்திரா இரண்டாக பாடாய் படுவதற்கும் தொடர்பில்லை. விடுதலையின் பாதை குழுவுக்கு கிடைத்த முதல் வரவேற்ப்பும் அங்கு குழுமியிருந்த திரை தொழிலாளிகளும் கொடுத்த உற்சாகம் […]

December 15, 2013 admin
“இலங்கை அகதிகளின் குடியுரிமைக்காக போராட்டம்!”: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அறிவிப்பு Running News

“இலங்கை அகதிகளின் குடியுரிமைக்காக போராட்டம்!”: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அறிவிப்பு

“தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க போராட்டம் நடத்துவேன்” என வாழும் கலையமைப்பின் நிறுவனரும், ஆன்மிகத் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். இன்று மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குள் சென்று முகாமில் வாழும் இலங்கை தமிழகர்களின் மனநிலைகளை அறிவதற்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று காலை காலை 11 மணியளவில் வந்து அகதிகளை சந்தித்து பேச வேண்டும் என்று மண்டபம் முகாம் தனி துணை ஆட்சியரிடம் அனுமதி கேட்டார்.ஆனால்,”அகதிகளை சந்திக்க […]

December 15, 2013 admin
இவன் வேற மாதிரி – திரை விமர்சனம்! Running News

இவன் வேற மாதிரி – திரை விமர்சனம்!

அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் நாயகனைப் பற்றிய ஆயிரத்தி ஒன்றாவது படம்தான் இதுவும்.‘இவன் வேற மாதிரி’ என டைட்டில் வைத்தாலும் வழக்கமான மசாலா படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தைப் பார்த்ததும், அழகான காதலை, உணர்வுபூர்வமாகக் கொடுக்க அருமையான ஒரு இயக்குனர் கிடைத்து விட்டார் என்று கொண்டாடப்பட்டவர் இயக்குனர் சரவணன். இரண்டாவது படத்திலேயே ஒரு மசாலாப் படத்தைக் கொடுத்து வழக்கமான இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிக்க முயற்சிப்பது வருத்தமான விஷயம்தான். விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து […]

December 15, 2013 admin
” மோடி ரொம்ப நல்லவரு” – இன்போசிஸ் நாராயண மூர்த்தி சர்டிபிகேட் Running News

” மோடி ரொம்ப நல்லவரு” – இன்போசிஸ் நாராயண மூர்த்தி சர்டிபிகேட்

பா.ஜ தலைவர் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு கோத்ரா மதக் கலவர சம்பவம் தடையாக இருக்காது என்றும் மோடிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் நீதிமன்றம் பிறப்பித்து இருக்கவில்லை” எனவும் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.. இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்-நாராயண மூர்த்தி, புதுடெல்லி தனியார் தொலைக்காட்சி நடத்திய இந்தியாவின் சாராம்சம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்,”2002 குஜராத் கலவரம் நரேந்திர மோடி நாட்டை ஆளுவதிலிருந்து தடுத்து நிறுத்தக்கூடாது. மோடிக்கு எதிராக […]

December 15, 2013 admin
இந்தியப் பெண் தூதர் மீதான விசாரணை தொடரும்! – அமெரிக்கா உறுதி Running News

இந்தியப் பெண் தூதர் மீதான விசாரணை தொடரும்! – அமெரிக்கா உறுதி

விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது எனறும் அவர் மீதான விசா குற்றச்சாட்டு, தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் இந்திய துணைத்தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவரும் மும்பையை சேர்ந்த தேவயானி கோப்ரகடே(வயது 39), வேலைக்காரப்பெண்ணுக்கு ஏ–3 விசா பெற்றதில் மோசடியில் ஈடுபட்டதாகவும், தவறான […]

December 15, 2013 admin
கே. பாலச்சந்தரை வீடு தேடி சந்தித்த ஆமீர்கான்! Running News

கே. பாலச்சந்தரை வீடு தேடி சந்தித்த ஆமீர்கான்!

சென்னையில் நடக்கும் 11வது சர்வதேச திரைப்பட விழாவை, கமல்ஹாஸனுடன் இணைந்து துவக்கி வைக்க வந்திருந்தார் நடிகர் ஆமீர்கான். நேற்றைய துவக்க விழாவுக்குப் பிறகு, இயக்குநர் கே பாலச்சந்தரை சந்திக்க விரும்பினார் ஆமீர். இதையடுத்து இயக்குநர் பாலச்சந்தரை அவரது மயிலாப்பூர் இல்லத்தில் சந்தித்தார் அமீர்கான்.ஆமீர் கானை வரவேற்று உபசரித்த பாலச்சந்தர், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஆமீர் கானின் படங்கள் மற்றும் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார்.பின்னர் பாலச்சந்தர் போன்ற சாதனையாளர்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆமீர்கான் தெரிவித்தார். […]

December 14, 2013 admin
8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வு!- தேர்வுத் துறை அறிவிப்பு Running News

8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வு!- தேர்வுத் துறை அறிவிப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம்( http://www.tndge.in/)வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி […]

December 14, 2013 admin
முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமான “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” ஆலபம் Running News

முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமான “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” ஆலபம்

என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சென்னையில் ஒரு நாள், சுற்றுலா போன்ற படங்களில் நடித்தவர்.இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார். மிருதுளா கதாநாயகியாக நடிக்கிறார்.வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார்.படம் பற்றி இயக்குனர் என்.ராஜேஷ்குமாரிடம் கேட்டபோது,”இது ஒரு ரொமான்டிக் பயணக் கதை! முழுக்க முழுக்க காதல்தான் மையக் […]

December 14, 2013 admin
திறந்த வெளியில் ரப்பர்கழிவுகளை எரிக்கத தடை -பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி Running News

திறந்த வெளியில் ரப்பர்கழிவுகளை எரிக்கத தடை -பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி

இந்தியாவின் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முறைப்படுத்தப்படாத வகையில் திறந்தவெளியில் ரப்பர்கழிவுகளை எரிப்பதற்கு தடை விதிப்பதாக நேற்று அறிவித்துள்ளது. பிளாஸ்டிக்,ரப்பர் மற்றும் பிற பொருட்கள் திறந்தவெளியில் எரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பிளாஸ்டிக் கழிவுகளின் முறைப்படுத்தப்படாத கையாளுதலும், அகற்றுதலும் தடை செய்யப்பட்டு மறு சீரமைப்பு சூழலில் இயற்கை பாதுகாப்பிற்குத் தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் இந்த தடை வழி வகுப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் விதிகளுக்கு உட்பட்டே பிளாஸ்டிக் […]

December 14, 2013 admin
உடனடி செய்திகள்