சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கணுமா? ‘ பறந்து செல்ல வா’ படத்தை தியேட்டரில் பாருங்க!

சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கணுமா? ‘ பறந்து செல்ல வா’ படத்தை தியேட்டரில் பாருங்க!

நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘பறந்து செல்ல வா’. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சீன பெண் ஒருவரும் நடித்துள்ளனர். மேலும் முதல்முறையாக காமெடி நடிகர்கள் கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடித்துள்ள இப்படம் பறந்து செல்லவா திரைப்படம் 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்த ஓர் அனுபவத்தை தரும் – என்கிறார் லூத்புதின் பாஷா !

c d 7

இது குறித்து அவர்,“பறந்து செல்ல வா “ திரைப்படத்தில் நடித்து உள்ளேன். முதல் முறையாக இதில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். கதாநாயகனாக நடிப்பதால் மட்டுமல்ல இப்படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல்கேங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நகைச்சுவை நடிகர்களாக சதிஷ், கருணாகரன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் சிங்கப்பூரில் படமாக்க பட்டுள்ளது. இதுவரை சிங்கப்பூரை அனைவரும் படமாக்கியது போல் படமாக்காமல் முற்றிலும் புதிய விதத்தில் உருவாக்கியுள்ளோம். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தை தரும்.

சைவம் திரைப்படத்தை முடித்துவிட்டு நான் கதைகளை கேட்டுகொண்டிருந்தேன். அப்போது இயக்குநர் தனபால் பறந்து செல்ல வா கதையை கொடுத்து இந்த கதையில் நீங்க நடிக்க வேண்டும் என்றார். இப்படத்தில் சம்பத் என்ற முக்கிய கதாபாத்திரம் உள்ளது அதில் தாங்கள் தான் நடிக்க வேண்டும் என்றார். கதையை முழுவதும் படித்தேன் கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது , எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு மார்டன் பெண்ணாக நடித்து இருக்கின்றார். அவர் படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் நட்போடு இருந்தார். எனக்கு சில இடங்களில் தடுமாறும் போது சொல்லி கொடுத்தார்.

இந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. அதை நான் அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அப்பா என்னிடம் “ நீ ஒரு நடிகன் , கதாநாயகன் என்பதனை மறந்து மிக சாதாரணமான நடிகன் என்று நினைத்து நடித்தால் போதும் என அறிவுரை கூறினார். படம் முடித்து விட்டு என்னுடைய அம்மாவையும் , தாணு சாரையும் அழைத்து படத்தை திரையிட்டோம். அவர் திரைப்படத்தை பார்த்துமுடித்துவிட்டு இடைவெளியில் ஏதாவது கூறுவார் என எதிர் பார்த்தேன். அவர் முழு படத்தையும் பார்த்து முடித்து விட்டு என்னை அழைத்து மிகவும் பாராட்டினார் .

மொத்தம் 50 நாட்களில் எங்கள் படம் படமாக்கபட்டு இருப்பதை கேள்விப்பட்டு எங்களை பாராட்டினார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு பிரபாகர் மற்றும் சந்தோஷ். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிக சிறந்த முறையில் வந்துள்ளது. மேலும் ரஜினி சார் படத்துல வருகின்ற பாடலான “ நம்ம ஊர் சிங்காரி “ பாடல் அப்படியே படமாக்கபட்டுள்ளது.
மேலும் நடனம் வகுப்புக்கு நான் சென்றது கிடையாது .இப்படத்தில் இரவு நேரங்களில் தான் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. படத்தை அனைவரும் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.மிக சிறிய குழு இனைந்து மிக சிறந்த முறையில் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளது. தயாரிப்பாளர் அருமை சந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார் என்றார் லூத்புதின் பாஷா.

நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தன் அனுபவம் குறித்து, “பறந்து செல்ல வா திரைப்படம் நாளை வெளியாகயுள்ளது. இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் நாசர் மகன் லூத்புதீன் பாஷா நடித்துள்ளார். கதாநாயகனாக நடிக்கும் லூத்புதினிக்கு இது முதல் படமாகும். படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் பதற்றத்துடன் இருந்தார் பின்பு நான் அவரோடு நட்புடன் பழகிய பின்பு காட்சிகளில் சிறப்பாக நடித்தார். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தோம். படபிடிப்பு மிக சிறந்த முறையில் நடந்தது. இதில் நரேல்கேங் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் நான் ஒரு மார்டன் கேர்ள் ஆக நடித்து இருக்கிறேன். இப்படத்தின் ஒளிப்பதிவுக்கு பிரபாகர் மற்றும் சந்தோஷ் பொறுப்பு. ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பாக வந்துள்ளது. படத்தின் காட்சிகள் மதுரை, தேனி. மேலும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக என்னுடைய படத்திற்காக சிங்கபூருக்கு படப்பிடிப்பிற்க்கு சென்றது இதுவே முதல்முறையாகும். இப்படத்தின் இயக்குநர் தனபால் இதற்க்கு முன்னரே நல்ல படம் ஒன்றை இயக்கியுள்ளார் படத்தின் பெயர் கிருஷ்ணவேனி பஞ்சாலை . அப்படம் கிராமத்தை சார்ந்த கதை. இப்படம் முழுவதும் நகரம் சார்ந்து கதை சிங்கப்பூரில் எடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் இயக்குநருக்கும் இப்படம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இப்படத்திற்கு ஜோஸ்வாஸ் ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார் அவர் காதல் திரைப்படதிற்கு இசை அமைத்தவர் காதல் திரைப்படத்தின் பாடல் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதுபோல் இப்படத்திலும் அனைத்து பாடல்களும் மிக சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் அருமை சந்திரன் தயாரித்துள்ளார். மிக சிறந்த முறையில் தயாரிப்புக்கு தேவையான அனைத்தையும் கவனத்தோடு செய்துகொடுத்தார்..நீங்கள் அனைவரும் இத்திரைப்படத்தை திரையரங்கில் வந்து காணும் படி கேட்டுகொள்கிறேன் நன்றி”என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Related Posts