உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர் -மெஸ்லி – டைம்ஸ் தேர்வு!
2023-ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் இதழின் சிறந்த வீரராக அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கால்பந்து உலகில் சாத்தியமற்றதாகத் தோன்றிய அமெரிக்காவை ஒரு கால்பந்து நாடாக மெஸ்சி மாற்றியுள்ளார் என்று டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.
நியூயார் நகரை மையமாக கொண்டு வெளி வரும் டைம்ஸ் இதழ் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் ஒவ்வொரு துறையிலும் சிறந்த விளங்குபவர்களை தேர்வு செய்து கவுரவிக்கும். 2023-ம் ஆண்டிற்கான பட்டியலை டைம்ஸ் இதழ் தற்போது வெளியிட்டு வருகிறது. அதில் இன்று வெளியான சிறந்த விளையாட்டு வீரருக்கான அங்கீகாரத்தை உலகின் நம்பர் 1 வீரர் லயோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் அணியை சிறப்பாக வழிநடத்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற உதவினர். இதன் மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதேபோல், ஆண்டு தோறும் சிறந்து விளங்கும் கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டுவோர் விருதையும் அவர் 8-வது முறையாக வென்றார். இதுவரை எந்த ஒரு வீரரும் 8 முறை இந்த விருதை வென்றதில்லை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதனிடையே, அமெரிக்காவில் நடைபெறும் கால்பந்து தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இன்டர் மயாமி அணிக்காக தற்போது மெஸ்ஸி விளையாடி வருகிறார். இவரது புகழ் மூலம் அமெரிக்காவில் கால்பந்தை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
சுருக்கமாக சொல்வதானால் எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் 35வயதான மெஸ்ஸி, கால்பந்து உலகின் உயரிய விருதான பலோன் டி’ஓர் ( Ballon d’Or) விருதுகளை 7 முறை வென்றுள்ளார். 43 கோப்பைகள், சாம்பியன்ஸ் லீக் பட்டங்கள் என பலவற்றையும் வாகை சூடிய வீரராக உள்ளார். உலக கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக, மெஸ்ஸியின் வாழ்க்கை பல தனிநபர் மற்றும் குழு சாதனைகளால் குறிக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க கால்பந்து வீரராக, அவரது வாழ்க்கையில் நம்பமுடியாத விஷயங்களைச் சாதித்துள்ளார்.
இப்படி பல்வேறு புகழ்களுக்கு சொந்தக்காரராக உள்ள மெஸ்ஸி இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக டைம்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது. இதை அடுத்து அவருக்கு உலகின் பல்வேறு விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.