குளிர்காலக் கூட்டத்தொடர் முடங்கி முடிந்து போனதில் 315 கோடி ரூபாய் (மட்டுமே) செலவு

குளிர்காலக் கூட்டத்தொடர் முடங்கி முடிந்து போனதில் 315 கோடி ரூபாய் (மட்டுமே) செலவு

எம்.பி.க்களுக்கு மாதச் சம்பளம் ரூ.50,000; தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.45,000; அலுவலகச் செலவுகள் நிதி ரூ.15,000; செக்ரெடேரியல் அசிஸ்டன்ஸ் நிதி ரூ.30,000. நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது நாளொன்றுக்கு ரூ.2000. மேலும் அரசுப் பணிகளுக்காகச் செல்லும் போது 34 விமானப் பயணத் தொகைகளை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் வரம்பற்ற ரயில், சாலைப் போக்குவரத்துகள் செலவுகளுக்கும் அனுமதி உண்டு.இதெல்லாம் மக்கள் பிரச்னையை அவையில் எடுத்துக் காட்டி தீர்வு காண அரசு வழங்கும் ஊதியச்ம். ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் ரூ.315 கோடி செலவாகியுள்ளது. ஆனால் நாடாளுமன்ற நடந்த 21 அமர்வில் 80 சதவீத நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

mp- dec 16

குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் நாடாளுமன்றம் எந்த அலுவலையும் மேற்கொள்ளாமல் முடங்கியது. மாநிலங்களவை கூடியதும் அலுவல் எதையும் மேற்கொள்ளாமல் அவைத் தலைவர் அமீத் அன்சாரி கூட்டத் தொடரின் நிறைவு உரையாற்றினார். தொடர்ச்சியான அமளியால் கூட்டத்தொடர் முழுமையும் வீணாக்கப் பட்டதற்கு அவர் வேதனை தெரிவித்தார். அவை உறுப்பினர்கள் அனைவரும் அதிருப்தியை வெளிபடுத்துவதற்கும், இடையூறு ஏற்படுத்துவதற்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்து சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தேசியகீதம் இசைக்கப்பட்ட பின்னர் அவையை அவர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

மக்களவையில் பேசிய காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை விவாதத்துக்கு தயாராக இருந்த நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சால் அது முடியாமல் போனதாக கூறினார். இதற்கு ஆளும் கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஏற்பட்ட அமளியால் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது பல்வேறு அறிக்கைகள் அவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து மக்களவை தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

Related Posts