ஓமைக்ரான் அலை – முதியவர்களை தாக்காமல் தடுக்க மூன்றாவது தடுப்பூசி!

ஓமைக்ரான் அலை – முதியவர்களை தாக்காமல் தடுக்க மூன்றாவது தடுப்பூசி!

திகரித்துக் கொண்டே போகும் புது வைரசில் இருந்து பாதுக்காத்துக் கொள்ள நோவாவாக்ஸ் 2 டோஸ் தடுப்பூசிகளும் முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் இணை நோய்களை உடைய முதியவர்கள் என்றால் அவர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி நிபுணர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். நேற்று -செவ்வாய்க் கிழமையன்று உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி நிபுணர்கள் இந்த அனுமதியை வழங்கினார்கள்.

இது தவிர பாலூட்டும் தாய்மார்களும் மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளலாம் கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கிடைக்கும் பயன் அதிகம் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பு நோக்கில் குறைவு என்று கருதினால் அவர்களும் மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம்.

நோய்களுக்காக நோய் எதிர்ப்புத் திறனை மருந்துகள் மூலம் குறைத்துக் கொள்பவர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி நிபுணர்கள் தெரிவித்தனர். வயதான முதியவர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது இந்தப் பரிந்துரையை வரவேற்பதாக இஸ்ரேல் பிரதமர் நாப்தாலி பென்னட் அறிவித்துள்ளார்.

ஒமைக்ரான் தொற்று அலை முதியவர்களை தாக்காமல் தடுக்க நான்காவது தடுப்பூசி பயன்படும் என்று அவர் கூறினார்.

நிபுணர் குழுவின் பரிந்துரையை இஸ்ரேல் சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும் அதன்பிறகுதான் முதியவர்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பு ஊசி கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியவரும்.

error: Content is protected !!