ஓமைக்ரான் பரவல் : இரவு நேர ஊரடங்கு? – மத்திய அரசு உத்தரவு!

ஓமைக்ரான் பரவல் : இரவு நேர ஊரடங்கு? – மத்திய அரசு உத்தரவு!

நாடு முழுவதும் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். 213 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 77 பேர் குணம் அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீா் 3 பேருக்கு செவ்வாய்க்கிழமை முதல்முறையாக ஓமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளாத நிலையில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனா். இன்று தஞ்சையில் ஒரு ஒமைக்ரான் நோயாளி கண்டரியப்பட்டுள்ளார்

இப்படி நாடு முழுவதும் ஓமைக்ரான் வகை தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு, கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா தொற்று பரவல் 10% மேல் இருந்தால், அந்த பகுதிகளைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

டெல்டா தொற்றைவிட ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் வசதி இருப்பை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts