வெள்ளை அங்கி…ஸ்டெதாஸ்கோப்…-மே 3-ல் நீட் தேர்வு: இன்றே விண்ணப்பிக்கலாம்!

வெள்ளை அங்கி…ஸ்டெதாஸ்கோப்…-மே 3-ல் நீட் தேர்வு: இன்றே விண்ணப்பிக்கலாம்!

ந்தியாவில் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வான நீட் (NEET UG 2026) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசியத் தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்வு, 2026-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 8 முதல் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் இப்போது இருந்தே தங்களைத் தயார்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

முக்கியத் தேதிகள் ஒரு பார்வையில்:

நிகழ்வு தேதி
ஆன்லைன் விண்ணப்பத் தொடக்கம் பிப்ரவரி 8, 2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 8, 2026 (இரவு 9 மணி வரை)
கட்டணம் செலுத்தக் கடைசி நாள் மார்ச் 8, 2026 (இரவு 11:50 மணி வரை)
விண்ணப்பத் திருத்தம் (Correction Window) மார்ச் 10 முதல் மார்ச் 12, 2026 வரை
தேர்வு நடைபெறும் நாள் மே 3, 2026 (ஞாயிற்றுக்கிழமை)
தேர்வு நேரம் மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
 விண்ணப்பிப்பது எப்படி? – ஒரு வழிகாட்டி
  1. இணையதளம் செல்லுதல்: முதலில் தேசியத் தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

  2. பதிவு செய்தல்: முகப்புப் பக்கத்தின் கீழே உள்ள ‘Registration for NEET(UG)-2026’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

  3. புதிய மாணவர்கள்: முதல்முறையாகத் தேர்வு எழுதப் போகும் மாணவர்கள், ‘Register yourself NEET (UG) 2026’ என்பதைத் தேர்ந்தெடுத்து, தங்கள் அடிப்படை விவரங்களை உள்ளிட்டுப் புதிய கணக்கை உருவாக்க வேண்டும்.

  4. ஏற்கனவே எழுதியவர்கள்: கடந்த முறை தேர்வு எழுதியவர்கள் எனில், ஏற்கனவே உள்ள விண்ணப்ப எண் (Application Number) மற்றும் கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி ‘Already registered Candidate’ வழியாக நேரடியாக நுழையலாம்.

  5. விவரங்களை நிரப்புதல்: உள்ளே சென்றதும் கேட்கப்பட்டுள்ள கல்வி மற்றும் தனிப்பட்ட விவரங்களைத் துல்லியமாக நிரப்ப வேண்டும்.

  6. ஆவணங்கள் பதிவேற்றம்: புகைப்படம், கையெழுத்து மற்றும் தேவையான சான்றிதழ் ஆவணங்களைச் சரியான அளவில் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.

  7. கட்டணம் செலுத்துதல்: இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் (Credit/Debit Card, Net Banking, UPI) வழியாகச் செலுத்தலாம்.

  8. ரசீது சேமிப்பு: கட்டணம் செலுத்திய பிறகு வரும் உறுதிப்படுத்தல் பக்கம் (Confirmation Page) மற்றும் ரசீதை எதிர்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம்.

ணப்பக் கட்டண விவரம்:

தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் அந்தந்தப் பிரிவினருக்கு ஏற்ப மாறுபடுகிறது:

  • பொதுப் பிரிவு (General): ரூ. 1,700

  • பொது-EWS / OBC-NCL: ரூ. 1,600

  • SC / ST / மாற்றுத்திறனாளிகள் / மூன்றாம் பாலினத்தவர்: ரூ. 1,000

  • இந்தியாவுக்கு வெளியே தேர்வு எழுதுபவர்கள்: ரூ. 9,500

தகுதிகள் மற்றும் ஆவணங்கள்:

  • வயது: 2026 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரருக்கு 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

  • கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிரித் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • தேவையானவை: சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து ஸ்கேன் நகல், முகவரிச் சான்று மற்றும் ஆதார் அட்டை போன்றவை அவசியம்.

தேர்வு முறை:

வழக்கம் போல ஆஃப்லைன் (Pen & Paper) முறையில் தேர்வு நடைபெறும். மொத்தம் 180 நிமிடங்கள் (3 மணி நேரம்) நடைபெறும் இத்தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் (Hall Ticket) வெளியாகும் தேதி மற்றும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதிகள் குறித்து NTA பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டி வருகிறது. கடும் போட்டி நிலவும் இந்தத் தேர்வில் வெற்றி பெற, திட்டமிட்ட பயிற்சியும், விடாமுயற்சியும் அவசியம். கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க, மாணவர்கள் இப்போதே அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in வாயிலாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென்காசி தேவா

Related Posts

error: Content is protected !!