புதிய தலைமுறை தொலைக்காட்சின் ஒளிப்பதிவாளர் சங்கர் விபத்தில் இறந்த சம்பவத்தில் நிர்வாகப் பங்கு என்ன?

புதிய தலைமுறை தொலைக்காட்சின் ஒளிப்பதிவாளர் சங்கர் விபத்தில் இறந்த சம்பவத்தில் நிர்வாகப் பங்கு என்ன?

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் சங்கர் விபத்தில் இறந்த சம்பவத்தில் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது செய்தியாளர்கள் குற்றச்சாட்டு சொல்வது சரியாக படவில்லை. புதிய தலைமுறை தொலைக்காட்சி வந்ததற்கு பிறகு தான் மாவட்ட செய்தியாளர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்பதையும் அதற்கு இப்போது அந்நிர்வாகத்தில் இருந்து விலகி இருக்கும் ராம் சார் எவ்வளவு மெனக்கெட்டார் என்பது பலருக்கு தெரியாது..!

மாதத்தில் நிலையான சம்பளமும். செய்தியாளர்கள் அதிகமாக ptc கொடுப்பதன் மூலம் அவர்களைப் பற்றி பல இடங்களுக்கும் தெரிய வந்ததும் ராம் சார் குரல் கொடுத்த பின்னரே நடந்த நிகழ்வு..

ஆனாலும் வணிக ரீதியில் மட்டும் செயல்படாத சேனலான புதிய தலைமுறைக்காக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் செய்தி சேகரிக்க திருவனந்தபுரம் சென்ற நிலையில், பணி முடிந்து இரவு 10 ஆன பிறகு, ஒரு அறை எடுத்து தங்கிக் கொள்ள நிர்வாகம் பணம் தரவில்லை எனவும், வாடகை காரில் செல்லவும் பணம் தர மறுத்ததாகவும் புகார் சொல்வதெல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்..

இதே புதிய தலைமுறையில் ஆண்டிப்பட்டி ஸ்டிங் ரிப்போர்ட்டராக இருந்து மாண்டவர் குடும்பத்துக்கு உடனடியாக 10 லட்சம் +

கோபிசெட்டிபாளையம் பகுதி நிருபர் மாண்ட சூழலிலும் கணிசமான தொகை…

முத்து கிருஷ்ணன் என்பவர் தந்தி டிவியில் இருந்து புதிய தலைமுறைக்கு வேலைக்கு சேர்ந்து மூன்றே மாதத்தில் சென்னை பாதாளச் சாக்கடை பள்ளத்தில் விழுந்து மரணித்த சூழலில் தன் அலுவலக ஸ்டாப் ஒன் டே சேலரியை பிடித்து கூடவே மேனேஜ் மெண்ட் பண்ட் ஒரு தொகை கொடுத்ததுடன் அரசுக்கும் முறைப்படி சொல்லி ஒரு நஷ்ட ஈடு கொடுக்க வழி செய்தது புதிய தலைமுறையாக்கும்.

இத்தனைக்கும் இந்த சேனலின் சார்பில் இரவு ரோட்டில் லாங் டூர் போகக் கூடாது என்று பாலிசி நோட்டே அனுப்பப்பட்டிருப்பது இங்குதான்..அதையும் மீறி இந்த சங்கர் தன் மகன் பிறந்த நாளை கொண்டாடும் ஆசையால் காரை தானே ஓட்டி வந்து காலனிடம் சரண்டாகிவிட்டார்..ஆனாலும் இதை அடுத்து இதே புதிய தலைமுறை மேனேஜ்மெண்ட் உடனடியாக தங்கள் சார்பில் இருவரை நாங்குநேரிக்கு விமானத்தில் அனுப்பி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்து விட்டு இன்று மாலை பு.த.ஸ்டாப்புகளை வைத்து ஓர் அஞ்சலிக் கூட்டம் நடத்தி வழக்கம் போல் ஒரு நாள் சம்பளத்தைப் பிடிக்க உத்தரவிட்டு தங்கள் பங்காகவும் ஐந்து லட்சம் கொடுக்க ஏற்பாடு செய்து உள்ளார்கள்.

கூடவே அந்த சங்கரின் சின்னச்சிறு குழந்தைக்கு இதயத்தில் உபாதை உள்ளது என்பதைக் கேள்விப்பட்டு அதையும் சரி செய்ய புதிய தலைமுறை சேனல் முன் வந்துள்ளதாம்…!

இச்சூழலில் மேற்படி சேனல் மீது புழுதி வாரி தூற்றுவது நியாயமாகப்படவில்லை!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!