தலைவா.. நீயே மாறலையே – காலியான கமல் கட்சியின் உள்விவகாரம்- முழு விளக்கம்!

தலைவா.. நீயே மாறலையே – காலியான கமல் கட்சியின் உள்விவகாரம்- முழு விளக்கம்!

ண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்ய கூட்டணி தோல்வியடைந்ததால் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இது குறித்து தலைவர் கமல் பரிசீலனை செய்வார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.

மநீம தலைவர் கமல்ஹாசன் தான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கிடையே, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார். மேலும், அவருடைய கட்சி சார்பில் போட்டியிட்ட துணை தலைவர் மகேந்திரன், முக்கிய நிர்வாகிகளான சி.கே.குமரவேல், பழ.கருப்பையா, பொன்ராஜ், ஸ்ரீப்ரியா, சிநேகன், சந்தோஷ் பாபு உள்ளிட்டோரும் தோல்வியைச் சந்தித்தனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து மகேந்திரன் தகவல் வெளியிட்டு கமல்ஹாசன் மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘அன்பு நிறைந்த மக்கள் நீதி மய்யக் குடும்பத்தினருக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் ஆகிய நான் கனத்த இதயத்துடனும், தெளிவான சிந்தனையுடனும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது, நான் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து உடனடியாக இன்றிலிருந்து விலகுகிறேன்.இப்படிப்பட்ட ஒரு கடினமான முடிவினை நான் இன்று எடுப்பதற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் தெரிவிப்பது எனது முக்கியமான கடமையும் பொறுப்பும் ஆகும்.

நான் ஏன் இப்போது கட்சியிலிருந்து விலகுகிறேன் என்பதற்கான விரிவான காரணத்தை உங்கள் அனைவரிடமும் இத்துடன் ஒரு விளக்க கடிதத்தை இணைத்துள்ளேன். மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக் கவனமாக எடுத்து இருக்கின்றேன். கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும், தனது தோல்விக்குப் பின்னரும், கமல்ஹாசன் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. எனக்குத் தெரிந்த கமல்ஹாசன், கொள்கைக்காகவும், எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும், அனைத்து நல்ல தலைமைப் பண்புகளையும் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகின்றேன்.” என்று கூறியுள்ளார்

மேலும் அவர் வெளியிட்ட ராஜினாமாவுக்கான காரணம் இதோ:

இவர் போலவே மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்கள் வகித்த பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர் பொதுச்செயலாளர் முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிர்வாகக் குழு கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், கட்சி கட்டமைப்பினை வலுப்படுத்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் கலந்துகொண்ட கட்சியின் உறுப்பினர்களான டாக்டர் மகேந்திரன், முருகானந்தம், மௌரியா ஐபிஎஸ்(ஒய்வு), தங்கவேல், உமாதேவி, குமாரவேல், சேகர், சுரேஷ் அய்யர்
ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இவற்றை ஏற்றுக் கொள்வதும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதையும் தலைவரே முடிவு செய்யட்டும் என தெரியப்படுத்தினர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கொடுத்த கடிதங்களை தலைவர் விரைவில் பரிசீலனை செய்வார் என தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!