32°C
விளம்பரம்
Advertisement

சதுரங்கத்தில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வேலம்மாள் பள்ளி!

admin Published: August 6, 2025 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


மெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள எபிஸ்கோபல் உயர்நிலைப் பள்ளியில், ஆகஸ்ட் 02 முதல் 07 வரை நடைபெற்றுவரும் ‘பிஃடே (FIDE) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025’ போட்டியில், இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றுள்ள சென்னையின் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு அருகில் உள்ளது.

போட்டியின் சிறப்பு அம்சங்கள்:

  • இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 55 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • இந்தியா சார்பில் முதன்முறையாகத் தமிழ்நாட்டிலிருந்து வேலம்மாள் பள்ளி வீரர்கள் இந்த சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
  • பள்ளியின் பயிற்சியாளர் எஸ்.வேலவன் தலைமையில், கீர்த்தி ரெட்டி (WFM), அஸ்வத்.எஸ் (IM), தக்ஷின் அருண் (FM), இளம்பரிதி.எ.ஆர் (IM), பிரனவ் கே.பி (FM) ஆகிய வீரர்கள் அணிவகுத்துள்ளனர்.

வேலம்மாள் பள்ளியின் வெற்றிப் பயணம்: மொத்தம் 8 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், வேலம்மாள் பள்ளி இதுவரை 6 சுற்றுகளை எதிர்கொண்டு, அனைத்திலும் வெற்றி பெற்று, தரவரிசையில் முதலிடத்தை எட்டியுள்ளது. அவர்கள் எதிர்கொண்ட நாடுகள்:

  1. மங்கோலியா
  2. ஹங்கேரி
  3. ஆஸ்திரியா
  4. அமெரிக்கா
  5. கஜகஸ்தான்
  6. இலங்கை

வெற்றிக்கு அருகில்: வேலம்மாள் பள்ளி தனது ஆட்டத்தில் பலம் வாய்ந்த கஜகஸ்தான் மற்றும் இலங்கைப் பள்ளிகளையும் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது. நாளை நடைபெறவிருக்கும் ஏழாவது சுற்றில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீட் (Seed Educational Complex) எஜுகேசனல் காம்ப்ளக்ஸ் பள்ளியை மீண்டும் சந்திக்கின்றனர். சதுரங்க ஆர்வலர்கள், இந்த ஆட்டத்திலும் வேலம்மாள் பள்ளி வென்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.

உடனடி செய்திகள்