32°C
விளம்பரம்
Advertisement

காதல் பாடல் எழுதுவது சவாலான விஷயம் ! – மதன் கார்க்கி அனுபவம்!

admin சேலம் Published: December 18, 2017 2 நிமிட வாசிப்பு Updated: December 19, 2017 Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், ‘வேலைக்காரன்’. இந்தப் படம் குறித்து சிவகார்த்திகேயன் , “அறிவு என்ற கதாபாத்திரத்தின் உணர்வுபூர்வமான, உணர்ச்சிகரமான பயணம்தான் படம். ஒட்டுமொத்த வேலைக்காரர்களுக்கான படமாக இருக்கும். நாம் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். அந்தப் பணம் எங்கே போகிறது, யாருமே திருடவில்லை. அப்படியானால் என் பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

 

ரெமோ படத்தைத் தயாரித்த ’24 AM STUDIOS’ இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் டிசம்பர் 22-ம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த டிச.,3-ம் நாள் இப்படத்தின் இசை வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் “எழு வேலைkகாரா” பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இப்படத்தின் “இதையனே” பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து அப்பாடல் குறித்து மதன் கார்க்கி, “காதல் பாடல் எழுதுவது என்பது எப்போதுமே சவாலான விஷயம். பாடல் வரிகள் மிகவும் சாதாரணமாகவும், அதே சமயம் ரசிகர்களை உடனடியாக கவரும் விதமாகவும் இருக்க வேண்டும். இரு ஆன்மாக்கள் உண்மையான காதலின் தேடலில் இருக்கும்போது இணைந்து, வழிந்தோடும் அழகான கவிதை பிறப்பதை பற்றி பேசுகிறது இதயனே பாடல். இருள், பொய்கள் மற்றும் எதிர்மறையான விஷயங்களை நேர்மறையான ஒளி அழிப்பதை பாடல் வரிகள் வலியுறுத்த வேண்டும்.

அனிருத் எப்போதுமே பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவரின் லேசான வாத்தியமும், சிறப்பான இசையும் பாடலை வேறு தளத்துக்கு நகர்த்தி சென்று விடும். சிவகார்த்திகேயன், அனிருத் இணை, இசை ரசிகர்களுக்கு சிறந்த காதல் பாடல்களை அயராது பரிசளித்திருக்கிறார்கள். இதுவும் என்னுடைய பொறுப்பை உணர்த்தி, அவர்களின் வெற்றியை தக்க வைக்க கடுமையான உழைப்பை கொடுக்க என்னை உந்தியது” என்றார் கார்க்கி.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்