‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ் “வைகை எக்ஸ்பிரஸ்” விளம்பரம் செய்து அசத்திய ஆர்கே

‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ் “வைகை எக்ஸ்பிரஸ்” விளம்பரம் செய்து அசத்திய ஆர்கே

இந்திய தபால் துறை தங்களது வாடிக்கையாளர்களுக்கென மை ஸ்டாம்ப் (My STAMP) என்ற திட்டத்தை கிட்டத்தட்ட நான்கு அண்டுகளுஇக்கு முன்பே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மறைந்த தலைவர்கள், சாதனையாளர்கள் உருவங்கள் மட்டும் தபால் தலைகளில் பொறிக்கப்படுவது மட்டுமல்லாமல், சாமானிய நடுத்தர மக்களும் தங்களது உருவம், மற்றும் தங்கள் தயாரிப்பு பொறிக்கப்பட்ட தபால் தலைகளை தலைமை தபால் நிலையங்களில் விண்ணப்பித்து பெறலாம். இத்திட்டம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிரபலமாக உள்ளது.

bd3d1cf0-0443-493a-b96a-608f31b60019

இந்தியாவில் இத்திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் போதிய விளம்பரமின்மையால் மக்களை சென்றடையவில்லை. இணையத்தின் மூலம் மக்கள் எளிதான முறையில் விண்ணப்பிக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மக்களிடையே தற்போது தான் இத்திட்டம் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. ஏராளமானவர்கள் தங்கள் முகம் பதித்த தபால்தலைகளை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். பெரும்பாலும் திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளில் அன்பளிப்பு பரிசாக தபால் தலைகளை அளிக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் கம்பெனிகளின் லோகோக்களும், தபால் தலைகளில் வெளியிட அறிமுகப்படுத்தியுள்ளது. இது கம்பெனிகளுக்கு ஒரு விளம்பரமாகவும் அமையும். நூல் வெளியீட்டு விழா, கல்லூரி விழாக்கள் போன்ற மகிழ்வான நாட்களை நினைவுக்கூறும், ஒரு அடையாளமாகவும் இந்த தபால் தலைகளை பயன்படுத்தலாம். இளைஞர்களிடமும், குழந்தைகளிடமும் கூட இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மை ஸ்டாம்ப் மூலம் உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமே தபால் தலைகளை வெளியிட முடியும். மேலும் அந்தத் தபால் தலைகளை தாங்கள் எழுதும் கடிதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு விண்ணப்பத்திற்கான விலை ரூ.300. ஒரு தாளில் பன்னிரெண்டு ஸ்டாம்ப் இடம்பெற்றிருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்படத்தையும் மற்றும் அவர்களது அடையாள சான்றிதழையும், விண்ணப்பத்துடன் இணைத்து கொடுத்தால் போதுமானது. கம்பெனிகளுக்கு மட்டும் தபால் தலை பெறுவதற்காக அனுமதி கடிதம் இணைத்து அளிக்கப்பட வேண்டும். மை ஸ்டாம்ப் குறித்த தகவலை மேலும் பெற www.chennaipost.gov.in <http://www.chennaipost.gov.in> என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

vaigai stamp mar 26a

இந்நிலையில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் வெற்றிகரமாக ஓடுவதை ஒட்டி ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கான தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த தபால் தலையில் நடிகர் ஆர்.கே மற்றும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ தொடர் வண்டியின் படமும் இடம் பெற்றுள்ளது. இதுவரை எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெருமை, இதன் மூலம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது. இதை நாம் அனுப்பும் தபால்களில் ஒட்டி அனுப்பலாம். நடிகர் ஆர்.கே., நடிகைகள் நீத்து சந்திரா, கோமல் சர்மா, வசனகர்த்தா பிரபாகர் ஆகியோர் இணைந்து தபால் தலையை வெளியிட்டனர்.

Related Posts