அமேசானில் காலிப்பணியிட வாய்ப்பு!.

அமேசானில்  காலிப்பணியிட வாய்ப்பு!.

மேசான்.. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், க்ளையண்ட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது.இந்நிலையில் தான் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அமேசான் ஐடி நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 0 -1 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

இருப்பினும் கூட விண்ணப்பம் செய்வோருக்கு சில விஷயங்கள் தகுதிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி டிகிரி படிப்புடன் QA மெத்தோடோலஜி அண்ட் டூல்ஸ் (Methodology and Tools) தெரிந்திருக்க வேண்டும். ஏதாவது கேஜெட்ஸ் (Gadgets) அல்லது டிவைஸ் (Device) பயன்படுத்திய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் இதுதவிர சாப்ட்வேர் டெஸ்ட்டிங் தெரிந்திருக்க வேண்டும்.

ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

error: Content is protected !!