இனிமே ஜனவரி 31ம் தேதி தாக்கல் ஆகப் போகும் பட்ஜெட் பற்றிய இண்டரஸ்டிங் ரிப்போர்ட்!

இனிமே ஜனவரி 31ம் தேதி தாக்கல் ஆகப் போகும் பட்ஜெட் பற்றிய இண்டரஸ்டிங் ரிப்போர்ட்!

நம் பார்லிமெண்டில் பிப்ரவரி மாசத்தில் தாக்கலாகும் பட்ஜெட் பற்றி சுவாரஸ்யங்கள் தகவல்கள் பல இருக்கின்றன. அதாவது சுதந்திரத்திற்கு முன் இந்தியாவுக்கான பட்ஜெட் அப்போதைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்களின் வசதி மற்றும் நோக்கத்துக்கு ஏற்ப தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இப்போது காலை நேரத்தில் தாக்கலாகும் பட்ஜெட் ஆங்கிலேயர் காலத்தில் மாலையில்தான் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கும் ஒரு காரணம் உண்டு. அப்போதிருந்தே இந்தியா ஒரு முக்கியமான சந்தை என்பதால், இந்திய பட்ஜெட் அறிவிப்புகள் அப்போதைய பிரிட்டிஷ் பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருந்தது. இதை கவனத்தில் கொண்டு, அவர்களது நாட்டில் பங்குச்சந்தை வணிகம் தொடங்கும் நேரத்திற்கு ஏற்ப மாலை வேளையில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

budget aug 22

நம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதல் பட்ஜெட் 1947 ஆம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சுதந்தரம் அடைந்து 3 மாதங்களே முடிந்திருந்த நிலையில் அந்த பட்ஜெட்டில் எந்த பெரிய முடிவுகளும் எடுக்கப் படவில்லை. பட்ஜெட் தாக்கல் செய்தவர் தமிழர் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்ற தமிழர் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பாஜக ஆட்சி காலத்தில் நாடு சுதந்திரம் பெற்ற பின்னும், பழைய பிரிட்டிஷ் நடைமுறைப்படியே மாலை வேளையில் தாக்கல் செய்யப்பட்டு வந்த பட்ஜெட், 2001ம் ஆண்டுதான் மாற்றப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ததன் பின், பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் மாறியது. தேதிகள் சில நேரம் மாறலாம் . ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளன்று மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது எழுதப்படாத விதியாக தொடர்கிறது. எனினும், தேர்தல் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த தேதி மாறியதுண்டு.

ஒரு முறை, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கிட்டத்தட்ட 15 நாட்கள் கழித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பரம ரகசியம் தொடக்க காலங்களில், பட்ஜெட் உரை ஜனாதிபதி மாளிகையில்தான் அச்சிடப்பட்டது. பின்னர், இது டெல்லி மின்டோ சாலையில் உள்ள பாதுகாப்பு அச்சகத்துக்கு மாற்றப்பட்டது. அந்நேரத்தில் பட்ஜெட் உரையின் ரகசியங்கள் சில கசிந்ததால், 1980ல் இருந்து இது நிதியமைச்சக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பிரத்யேக அச்சகம் அமைக்கப்பட்டு, அங்கு அச்சிடப்படுகிறது.

பட்ஜெட் உரையில் வரிவிதிப்பு குறித்த பல முக்கிய முடிவுகள் இடம் பெறுவது கசிந்தால், அது தனிநபர் சிலருக்கு பெருத்த லாபமாக அமையும் என்பதோடு, அரசுக்கும் கணிசமாக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், பட்ஜெட் உரை தயாரிப்பு முதல் அச்சிட்டு அவை புத்தகக்கட்டுகளாக மக்களவையை வந்தடையும் வரை அனைத்து நிகழ்வுகளும் கழுகுக்கண் கொண்டு கண்காணிக்கப்படும். பலமான கண்காணிப்பு இந்த பணியில் ஈடுபடும் அனைவரும் கடைசி சில நாட்களுக்கு வெளியுலக தொடர்பு அறுந்து… உணவு… உறக்கம் உட்பட அனைத்தையும் நிதியமைச்சக பாதுகாப்பு அறைகளிலேயே முடித்துக் கொள்ள வேண்டிய அளவு ரகசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இந்நாட்களில் அவர்களது மொபைல் போன்கள் வழியே தகவல் கசியாதபடியும் கண்காணிப்பு பலமாக இருக்கும்.

மொராய்ஜி தேசாய் சாதனை நாடாளுமன்றத்தில் இதுவரை அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயைத்தான் சாரும். நேருவின் அமைச்சரவை முதல், இந்திரா காந்தியின் அமைச்சரவை வரை மொத்தம் 10 முறை அவர் பொது பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் 8 முறை முழு ஆண்டுக்கான பட்ஜெட்டும், 2 முறை இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும்.

இதனிடையே பட்ஜெட் நடைமுறைகளில் மாற்றம் செய்து வருகிறது மத்திய அரசு. இதில் ஒரு பகுதியாக ரயில்வே பட் ஜெட்டை மத்திய பட்ஜெட் உடன் இணைத்தது. அதேபோல அனைத்துவிதமான மறைமுக வரிகளுக்குப் பதிலாக ஜிஎஸ்டி கொண்டுவரப்பட உள்ளது. அதே போல திட்டமிட்ட செலவுகள் மற்றும் திட்டமிடா செலவுகள் என்னும் பகுதியை நீக்கிவிட்டு மூலதன கணக்கு செலவுகள் மற்றும் வருவாய் கணக்கு செலவுகள் என மாற்றி அமைக்க உள்ளது.

தற்போது பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு, மே மாதம் மத்தியில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வழங்கப் படுகிறது. இந்த இரு நடைமுறை களையும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. குறிப்பிட்ட தேதியில் பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லை என்பதால் பட்ஜெட் நடைமுறைகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிடுகிறது மத்திய அரசு. அதாவது ஜனவரி 31-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், மொத்த நடைமுறையும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க முடியும் என அவர்கள் கூறினார்கள்.

Related Posts