சமூக வலைதளங்களைக் கண்காணிக்க தனிச்சட்டம்- துருக்கியில் அமல்!

சமூக வலைதளங்களைக் கண்காணிக்க தனிச்சட்டம்- துருக்கியில் அமல்!

8.3 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட துருக்கியில் 5.4 கோடி மக்கள் சமூக வலை தளத்தில் உள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில் துருக்கியில் சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க பிறப்பிக்கப்பட்ட தனிச் சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களின் தனிப்பக்கக் கணக்குகளாக பல்வேறு சமூக வலைதளங்கள் உள்ளன. தாங்கள் விரும்பும் கருத்துக்களை பதியும் தளமாக சமூக வலைதளங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் துருக்கியில் சமூக வலைத்தளங்களில் பதியப்படும் கருத்துக்களை தணிக்கை செய்யும் தனிச்சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இச்சட்டத்தின்படி பல்வேறு நாடுகளின் சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்களது செயலியின் பயனாளர்களின் உள்ளடக்கம் குறித்து தணிக்கை செய்ய துருக்கியில் உள்நாட்டு பிரதிநிதிகளை கொண்ட குழுவை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இந்த நடவடிக்கைக் குறித்துப் பேசிய ஆளும்கட்சி உறுப்பினர் ருமேசா கடக், “இந்த சட்டத்தின் மூலம் சமூக வலைத்தளங்களினால் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளை கட்டுப்படுத்துவது சாத்தியமாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!