ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா?

ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்களின் பின்னர் நாளை மறுதினம், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 482 பேர் போட்டியிடுகின்றனர்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் 20-ந்தேதி நடைபெறும் என மாற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று குறையாக நிலையில், பின்னர் ஆகஸ்டு 5ந்தேதிக்கு வாக்குப்பதிவு தேதி மாற்றி அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை கைப்பற்ற 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட 25 அரசியல் கட்சியை சேர்ந்த 3 ஆயிரத்து 652 வேட்பாளர்களும், 313 சுயேட்சைக்குழுக்களை சேர்ந்த 3 ஆயிரத்து 800 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.அதிக அளிவலான வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 924 வேட்பாளர் கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.குறைந்த அளவிலான வேட்பாளர்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். அந்த மாவட்டத்தில் 152 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 12 ஆயிரத்து 894 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 773 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.பொதுத்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன

பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் புதன்கிழமை அதாவது ஆகஸ்டு 5ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி 6ம் தே கதி காலை 7.00 மணிக்கு அல்லது 8.00 மணிக்கு ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே இந்த தேர்தல் பொது சுகாதார அபாயமாக மாறுவதைத் தடுக்க, இலங்கை தேர்தல் ஆணையம் மற்றும் இலங்கை அரசாங்கம் பல சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, அதன்படி வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கையை ஐந்து பேருக்குள் இருக்க வேண்டும். 300 பேர் மட்டுமே பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள். கட்சித் தலைவர் கலந்து கொண்டால் அக்கூட்டத்தில் 500 பேர் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இடையில் ஒரு மீட்டர் தூரம் சமூக இடைவெளி இருக்கவேண்டும்.

அனைவரும் கை சுத்திகரிப்பான்கள், முகமூடிகள் மற்றும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும். தனி நுழைவு வழி மற்றும் வெளியேறும் வழிகளை கொண்ட வாக்குச் சாவடிகளில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான நபர்களை அனுமதிக்கவேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகளுக்கு பிபிஇ கிட்களை வழங்கவேண்டும் என்பது போன்ற பல பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றபட வேண்டும் என்று அவிக்கப்பட்டுள்ளதாக்கும்..

error: Content is protected !!