ஏய்..ட்விட்டர்..நீ இன்னா அம்மாம் பெரிய அப்பாடக்கரா? – ட்ரம்ப் எகிறல்

ஏய்..ட்விட்டர்..நீ இன்னா அம்மாம் பெரிய அப்பாடக்கரா? – ட்ரம்ப் எகிறல்

“வர இருக்கும் 2020 அதிபர் தேர்தலில் எல்லை மீறி ட்விட்டர் தலையிடுகிறது. அவர்கள், பொய் செய்திகளை வெளியிடும் சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட் போன்றவைகளுடன் இணைந்து நான் ஆய்வின் அடிப்படையில், தபால் ஓட்டுச்சீட்டுகள் மூலம் தேர்தலில் மோசடி நடக்கும் என கூறுவதை பொய் என கூறுகிறது. இது பேச்சு சுதந்திரத்தை தடுக்கும் செயலாகும். நான் அதிபராக இருக்கும் வரை அதனை அனுமதிக்க மாட்டேன்” என்று அமெரிக்க அதிபர்  ட்விட்டர் தளத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க ஆயத்தமாகும் நிலையில் அரசையும், மக்களையும் அச்சுறுத்தி முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தேர்தலை, ‘இ – மெயில்’ மூலம் நடத்த ஜனநாயக கட்சி வலியுறுத்தி வருகிறது.ஆனால், இந்த அப்படி எல்லாம் நடப்பதன் மூலம் மோசடி வேலைகள் எல்லாம் நடக்க வாய்ப்புண்டு என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்று முன்தினம் ட்விட்டரில் இரண்டு பதிவுகளை வெளியிட்டார்.

அதில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இ – மெயில் மூலம் ஓட்டளிக்கும் நடைமுறை, தேர்தலில் மோசடி நடக்க வழிவகுக்கும். இ – மெயிலுக்கு வந்து சேரும் ஓட்டுகள் கொள்ளையடிக்கப்படும்; அதன்மூலம், போலியான ஓட்டுச்சீட்டுகள், ‘பிரின்ட்’ செய்யப்பட்டு, மோசடிகள் அரங்கேறும். கலிபோர்னியா மாகாண கவர்னர், லட்சக்கணக்கான மக்களுக்கு ஓட்டுச் சீட்டுகளை அனுப்பி வருகிறார்.

அவர்கள் யார், அங்கு எப்படி வந்தார்கள் என்பது பற்றி கவலைப்படவில்லை. அவர்களில் பெரும் பாலானோர் கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் ஓட்டு போடவில்லை. எப்படி யாருக்கு போடப் போகிறோம் என்ற எண்ணமும் இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தேர்தலில் மோசடிக்கு வழிவகுக்கும். என தெரிவித்திருந்தார்

என்று தெரிவித்திருந்தார்.

இதை அடுத்து, ட்ரம்பின் இந்த இரண்டு டுவிட்டுகளின் கீழும், நீல நிற ஆச்சரிய குறியுடன், ‘இமெயில் மூலம் ஓட்டளிக்கும் முறை குறித்த, உண்மை தகவல்களை பெறுங்கள்’ என, மக்களுக்கு அறிவுறுத்தும் விதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிபர் டிரம்பின் அறிக்கையை, ட்விட்டர் நிர்வாகம் எச்சரித்துள்ளது  இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் டென்ஷனான ட்ரம்ப் ஆரம்ப பேராவில் சொன்னது போல் ’வர இருக்கும் அதிபர் தேர்தலில், ட்விட்டர் எல்லை மீறி தலையிடுகிறது. பெரும் ஊழல் மற்றும் மோசடிக்கு வழிவகுக்கும் இ – மெயில் ஓட்டுச்ச்சீட்டுகள் தொடர்பாக, நான் வெளியிட்ட அறிக்கை தவறானவை என, அது கூறுகிறது.

சி.என்.என்., மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போலி செய்தி நிறுவனங்களின் தகவல்களை வைத்து, இவர்கள் இப்படி கூறுகின்றனர். ட்விட்டர், பேச்சுரிமையை கட்டுப்படுத்துகிறது. அதிபராக இருக்கும் நான், அதை அனுமதிக்க மாட்டேன்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக், ‘ட்விட்டர் நிறுவனத்தில் நடக்கும் சகல செயல்பாடுகளுக்கும் பொறுப்பானவர் ஒருவர் இருக்கிறார். அவர் நான் தான். ஆகையால் தயவு செய்து எங்களது ஊழியர்களை விட்டு விடுங்கள். நாங்கள் உலகமெங்கும் நடக்கும் தேர்தல் குறித்த தவறான தகவல்களை சுட்டிக்காட்டுவோம்.அதேசமயம் எங்கள் தவறுகளை ஒத்துக்கொள்வோம்,’ என்று விளக்கமளித்துள்ளார்

error: Content is protected !!