சென்னை ICF-ல் பயிற்சியும், வேலைவாய்ப்பும்!

சென்னை ICF-ல்  பயிற்சியும், வேலைவாய்ப்பும்!

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) 1,010 தொழிற்பயிற்சி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

காலிப்பணியிட விவரங்கள்:

மொத்தம் 1,010 பணியிடங்கள். இதில் புதியதாய் சேர்பவர்களுக்கு 330 இடங்களும், ஐடிஐ முடித்தவர்களுக்கு 680 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • கார்பெண்டர்: 90
  • எலெக்ட்ரிஷியன்: 200
  • பிட்டர்: 260
  • மெக்கானிஸ்ட்: 90
  • பெயிண்டர்: 90
  • வெல்டர்: 260
  • ரேடியோலாஜி: 5
  • பாதோலாஜி: 5
  • பாசா (PASAA): 10

பயிற்சி காலம்:

  • ஐடிஐ தகுதி பெற்றவர்களுக்கு: 1 வருடம்
  • 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கு: 2 வருடங்கள்
  • வெல்டர், ரேடியோலாஜி, பாதோலாஜி பிரிவுகளுக்கு: 1 வருடம் 3 மாதங்கள்

வயது வரம்பு (11.08.2025 தேதியின்படி):

  • குறைந்தபட்சம்: 15 வயது
  • அதிகபட்சம்: 22 வயது (ஐடிஐ முடித்தவர்கள் 24 வயது வரை இருக்கலாம்)

கல்வித்தகுதி:

  • பிட்டர், எலெக்ட்ரிஷியன், கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், ப்ரோகிராமிங் மற்றும் சிஸ்டம் பிரிவுகளுக்கு: குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அந்தந்த தொழிற்பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி.
  • அனுபவமில்லாதவர்களுக்கான இடங்களுக்கு: 10-ம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
  • ரேடியோலாஜி மற்றும் பாதோலாஜி இடங்களுக்கு: இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி.

உதவித்தொகை (Stipend):

  • 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கு: மாதம் ரூ.6,000
  • 12-ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கு: மாதம் ரூ.7,000
  • ஐடிஐ முடித்தவர்களுக்கு: மாதம் ரூ.7,000
  • 2ஆம் ஆண்டு பயிற்சி காலத்தில் கூடுதலாக 10% உயர்த்தப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மெரிட் பட்டியல் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடற்தகுதி/ மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, இறுதியாக பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விருப்பமுள்ளவர்கள் https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை).
  • மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பங்கள் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 11, 2025 வரை பெறப்படும்.

Related Posts

error: Content is protected !!