இனிமே நீங்க கரண்ட் பில் எம்புட்டு செலுத்தணும் தெரியுமா? இதோ பாருங்கள்..!.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 யூனிட் வரை இலவசமாக அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது. ஆட்சி அமைந்ததும் அந்த வாக்குறுதியை தனது முதல் உத்தரவிலேயே நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

அதன்படி மே 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டத்தின்படி ஒருவர் எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தாலும் அவருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களில் 600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், அவர் 500 யூனிட்டுக்கான பணத்தை செலுத்தினால் போதுமானது.
அதாவது கடந்தத் திங்கள்கிழமை (மே 23) முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. எனவே திங்கள்கிழமைக்கு பின்பு எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.எனவே, நீங்கள் பயன்படுத்தும் மின் யூனிட்டுக்கு ஏற்ப, இனி வருங்காலத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் குறையும்… அது எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
100 யூனிட்டுக்குள் மின்சார உபயோகம் இருந்தால் அவர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதே இல்லை.
கீழ்க்கண்ட அட்டவணையில், 120 யூனிட்டுகள் பயன்படுத்தியிருப்பின், அதில் 100 யூனிட்டுகள் கழிக்கப்பட்டு மிச்சமிருக்கும் 20 யூனிட்டுக்கு மட்டும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
இதே போல ஒவ்வொரு யூனிட்டுக்கும் ஒவ்வொரு கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்பதை பார்க்கலாம். இந்த நிலையில் தற்போது 100 யூனிட்டுக்கு மேல் போனால் எவ்வளவு கட்ட வேண்டும் என்பது குறித்து டான்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கியுள்ளது. அதன்படி 100 யூனிட்டுக்கு மேல் போனால் அதில் 100 யூனிட்டைக் கழித்து விட்டு மீதம் வரும் யூனிட்டுகளை மட்டும் கணக்கிட்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



