ஐதராபாத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜாப்!

ஐதராபாத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்  ஜாப்!

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சுங்கவரி மற்றும் மத்திய கலால் ஆணைய அலுவலகத்தில் காலியாக உள்ள வரி உதவியாளர், ஸ்டெனோகிராபர் மற்றும் ஹவில்தார் பணிகளுக்கு விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

job nay 26

பணியிடங்கள் விவரம்:

1. Tax Assistant: 1 இடம். சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். வயது: 31.5.2016 அன்று 18 முதல் 27க்குள்.

2. Stenographer Grade II: 1 இடம். சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: பிளஸ்2 தேர்ச்சியுடன் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருப்பதோடு அதை டைப்பிங் செய்யவும் வேண்டும். வயது: 31.5.2016 அன்று 18 முதல் 27க்குள்.

3. Hawaldar: 9 இடங்கள். சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சி. வயது: 31.5.2016 அன்று 18 முதல் 27க்குள்.

மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கும் கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், கால்பந்து ஆகிய விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வாலிபால் விளையாட்டுக்கு 1 லிப்ரோ வீரரும், கூடைப்பந்து விளையாட்டுக்கு Point Guard -1/ Shooting Guard – 1/ All Rounder – 1 ஆகிய 3 வீரர்களும், டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு ஆணோ அல்லது பெண்ணோ ஒருவரும், கால்பந்து விளையாட்டுக்கு Goal Keeper – 1, Mid Fielder – 1, Striker – 1, Forward – 1, Defender – 1 ஆகிய 5 வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஒரு பணிக்கு 3 பேர் வீதம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விளையாட்டு வீரர்கள் கிடைக்காவிட்டால் 800 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர், 10,000 மீட்டர் ஆகிய தூரத்திற்கு விண்ணப்பதாரரின் விருப்பத்தின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டில் சர்வதேச அளவிலோ அல்லது தேச அளவிலோ அல்லது மாநில அளவிலோ அல்லது பல்கலைக்கழக அளவிலோ விளையாடி சாதனை புரிந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பத்தை www.cbec.gov.in அல்லது www.cexhyd1.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது ஐதராபாத் சுங்க மற்றும் மத்திய கலால் அலுவலகத்திற்கு ரூ.10 ஸ்டாம்ப் ஒட்டிய சுய முகவரியிட்ட வேண்டுகோள் கடிதம் அனுப்பி பிரத்யேக விண்ணப்பத்தை பெறலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டி முகவரி:

The Additional Commissiioner (P & V),
 Customs, Central Excise & Service Tax,
Hyderabad-I Commissionerate,
Kendriya Shulkh Bhavan, Basheerbagh,
Hyderabad – 500004.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 31.5.2016.

Related Posts