10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

கோவை கலெக்டர் ஆபிசில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்தார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ். அதன்படி, 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3 ல் தொடங்கி 25ஆம் தேதி வரை நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு தேர்வுகள், மார்ச் 5ல் தொடங்கி, 27 வரையும்; 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரையும் நடைபெறுகிறது.

இதோ முழு விபரம்:

* 12 ம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது.

* 11ம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.

* 10ம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

* தமிழ்- 28.03.2025

* ஆங்கிலம்- 02.04.2025

* கணிதம்- 07.04.2025

* அறிவியல்- 11.04.2025

* சமூக அறிவியல்- 15.04.2025

* தேர்வு செய்த மொழிப்பாடம்- 04.04.2025

11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மொழிப்பாடம்- 05.03.2025

ஆங்கிலம்- 10.03.2025

கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 13.03.2025

உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 17.03.2025

இயற்பியல், பொருளாதாரம்- 20.03.2025

கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 24.03.2025

வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 27.03.2025

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மொழிப்பாடம்- 03.03.2025

ஆங்கிலம்- 06.03.2025

கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 11.03.2025

கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 14.03.2025

உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 18.03.2025

வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 21.03.2025

இயற்பியல், பொருளாதாரம்- 25.03.2025

ரிசல்ட் எப்பொழுது?

* 10ம் வகுப்பு- மே 19ம் தேதி,2025

* 11ம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025

* 12ம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025

செய்முறைத் தேர்வுகள்

* 12ம் வகுப்பிற்கு 07.02.2025 முதல் 14.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.

* 11ம் வகுப்பிற்கு 15.02.2025 முதல் 21.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.

* 10ம் வகுப்பிற்கு 22.02.2025 முதல் 28.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.

Related Posts