32°C
விளம்பரம்
Advertisement

திருட்டு பயலே 2- திரை விமர்சனம் – குடும்பத்தோடு போய் பார்க்கலாம்!

admin சேலம் Published: December 1, 2017 4 நிமிட வாசிப்பு Updated: December 3, 2017 Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது பேஸ்புக்கில் தான் என்பதும் அதில் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது என்பஃதும் எல்லோரும் அறிந்த விஷயம்தான். இன்றைக்கும் காலையில் பேப்பரை திறந்தால் நிச்சயம் அதில் பேஸ்புக் நண்பரிடம் கற்பை இழந்த மாணவி, பேஸ்புக் காதலால் வந்த விபரீதம் அப்படி இப்படின்னு நிறைய செய்திகளை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் என்றாலும் யாரும் அதை புறக்கணிப்பது இல்லை. இந்லையில்தான் இது போன்ற சோஷியல் மீடியாக்களின் ஆபத்தையும் அதன் போக்கையும் சுவைபட விவரித்து எச்சரிக்கை செய்துள்ளார் ‘திருட்டு பயலே 2’ இய்க்குநர் சுசி. கணேசன்.

ஆம்.. இந்த முழுப்ப்படமே பேஸ்புக்கில் பெண்களுக்கு வலை வீசி தன் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒருவனுக்கும், ரகசியங்களை ஒட்டுகேட்கும் ஒரு சோ கால்ட் போலீஸூக்கும் இடையே அழகான மனைவி மாட்டிக் கொள்வதுதான் இதன் திரைக்கதை. .

அதாவது இண்டெலிஜென்ஸ் டிப்பார்மெண்டில் வேலை பார்க்கும் பாபி சிம்ஹா (செல்வம்). அவரோட ஒய்ஃப் அகலா பால் (அகல்). இந்த பாபிசிம்ஹா தன் ஹையர் ஆபீசர்கள் சொன்னதன் பேரில் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் போறோரின் பேச்சுகளை ஒட்டு கேட்பது வாடிக்கை. அதில் கசியும் பல உண்மைகள் மிகப்பெரிய அளவிலான முறைகேடுகளை அம்பலப்படுத்துகிறது. இதை ஐ.ஜி. முத்துராமனும், அதிகாரி செல்வமும் (பாபி சிம்ஹா) தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனிடையே தன் மனைவி மிகப் பெரிய சிக்கலில் இருப்பதை தெரிந்துகொள்ளும் செல்வம் (சிம்ஹா) அதற்குக் காரணமான பால்கியுடன் (பிரசன்னா) நேருக்கு நேர் மோதுகிறார். அந்த மோதலுக்கு என்ன காரணம், சிக்கலில் செல்வம் மனைவி எப்படி சிக்கினார், அதற்கான முகாந்திரம் என்ன, வெடிக்கும் மோதலுக்குப் பிறகான இழப்புகள், பாதிப்புகள், விளைவுகள் என்ன என்பதை ‘திருட்டுப்பயலே 2’ திறமையுடன் திரைக்கதையாக விவரிக்கிறது.

ஹானஸ்ட் கரப்டட்… என்று தன்னை வர்ணித்து கொண்டு தன்னால் முடிந்த அளவு மிடுக்கு கலந்த போலீஸாக வரும் பாபி சிம்ஹா யதார்த்தமாக நடித்திருக்கிறார். அமலா பாலுடனான காதல் காட்சிகளிலும் சரி, சந்தேதத்தின் போதும் வி.ஐ.பிகளின் போன் கால்களை ஒட்டுக் கேட்கும் போதும் சரி, அவரது நடிப்பும், துடிப்பும் அட சொல்ல வைக்கிறது.. அதே சமயம் ஹீரோ எனப்படும் பாபி சிம்ஹாவுக்கு இணையான ரோலில் ஆனால் வில்லன் கேர்க்டரில் வரும் பிரசன்னா தனி ஸ்கோர் செய்கிறார். இம்புட்டு திறமை உள்ளவர் ஏன் தனி ஆவர்தனம் செய்ய மாட்டேன் என்கிறார் என்ற கவலையே வருகிறது.

கார் ரிஜிஸ்ட்ரேசன் மூலம் ஹாட் டாபிக்காகி இருக்கும் அமலாபால் இப்படத்தில் லவ், ரொமான்ஸ் கிளாமர், பேமிலி கேர்ள்… என்று சகல பிளாட்பாரத்திலும் சருக்கி கொண்டே போயிருக்கிறார். குறிப்பாக லேப்டாப்பும், செல்போனும் கையுமாக பேஸ்புக்கில் மூழ்கி பின்னர் அது விபரீதமாகி போன் பெல் அடிப்பதையே கேட்டு நடுங்கும் குடும்ப பெண் அமலாபால் ரொம்ப பாந்தம். பாடல் காட்சிகளில் கூடுதல் கிளாமரில் காட்டி அமலாபால் மேலுள்ள பிரியத்தை குறைத்து விடுகிறார்
ஆடம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், பிரதீப் நாயர், சந்திரமௌலி, முத்துராமன் ஆகியோர் சரியான தேர்வு. செல்லத்துரையின் ஒளிப்பதிவும், வித்யாசாகரின் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

நேரா வளர்ர மரத்தை தான் முதல்ல வெட்டு வாங்க.” , ” எனக்கு சேலை அழகா? சுடிதார் அழகா…? இரண்டும் இல்லாது இருந்தா ரொம்ப அழகு!” , ” மனுஷங்களை ஒட்டு கேட்க ஆரம்பித்த பின் யாரையும் நம்ப முடியல… ” , “டிபார்ட்மென்ட்ல அடிச்சுட்டே இருக்கிறவன் மாட்டிக்கு வான் .. அடிச்சுட்டு ஒதுங்கறவன் தான் தப்பிச்சிக்குவான் .. “,சோகத்தை முதல்ல என்கிட்ட சொல்ற சுதந்திரத்தை நான் எப்படி உன்கிட்டே கொடுக்காமல் போனேன்…” ‘கரப்ட்னா கண்ட இடத்துல கைவைக்குறது, ஹானஸ்ட் கரப்ட்னா யாரும் காணாத இடத்துல கை வைக்குறது’, ‘கம்ப்யூட்டர்ல எப்படி வாசனை வரும்? கடவுளுக்கு நைவேத்தியம் இப்படிதானே பண்றாங்க, சாமி ஏத்துக்குறதில்லையா’, ‘எல்லா தனி மனிதனும் கரப்ட் ஆக ஆசைப்படறான், சொசைட்டி மட்டும் எப்படி க்ளீனா இருக்கும்’, ‘என்னைக் கொல்லாம விட்டது உன் தப்பு, தீக்குச்சி எடுத்தது நீ, கொளுத்தப் போறது நான்’, ‘ரகசியம் மாட்டிக்கிட்ட வாய் வீராப்பு பேசும், மனசு அய்யோ அம்மான்னு அலறும்’, ‘உன்னைப் புரிஞ்சுக்கிட்டேன், உன் அப்பா மாப்பிள்ளை தேடுறார், நீ ஒரு ஃப்ரெண்டைத் தேடுற’ போன்ற ஜி.ஆர்.சுரேந்திரநாத்தின் வசனங்கள் தனித்துத் தெரிகின்றன.

ஆனால், இரண்டாம் பாதியில் பல விஷயங்களில் சுசி கணேசன் உரிய கவனம் செலுத்தாமல போனதால் படத்தில் ஓட்டத்தில் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது. அது மட்டுமின்றி பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்பதே சகலருக்கும் அபத்து என்ற ரீதியில் கொஞ்சம் கிலியை ஏற்படுத்தி இருப்பது கொஞ்சம் ஓவர்தான் என்பதுடன் இந்த படத்துக்கான விளம்பரத்தை யும் கள்ளக் காதல் பாகம் 2 ரேஞ்சுக்கு பண்ணி பலரை குழப்பத்துக்கு ஆளாக்கினாலும் ஒவ்வொருவரும் குடும்பத்தோடு பார்க்க தகுந்த படமிது என்பதில் சந்தேகமில்லை.

மார்க் 5 / 3.25

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்