சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்!

சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்!

கொரானா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் கடுமையாகத் தாக்கிக் கொண்டுள்ளது. ஆக்சிஜன் இல்லை; படுக்கைகள் இல்லை; மருந்துகள் பற்றாக்குறை; கருப்புச் சந்தையில் பல ஆயிரங்களுக்கு மருந்துகள் விற்பனை; எரிப்பதற்குக் கூட பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய அவலநிலை என செய்திகள் அலறிக்கொண்டு இருக்கின்றன.

500 கொரானா நோயாளிகள் உள்ள தில்லி GTB மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்து போகும் நிலைக்கு வந்து விட்டார்கள். “நாங்கள் எங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்ததைப் பார்த்ததும் நாங்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டோம்” என்கிறார் ஒரு மருத்துவர் !

சி.பி.எம்.மும், காங்கிரசும் மேற்கு வங்கத்தில் கொரானா நெருக்கடியை உணர்ந்து தங்களது பரப்புரையை நிறுத்திவிட்டார்கள். ஆனால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள். இந்தக் கடும் நெருக்கடியில் உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்கும் கும்பமேளாவையும் உற்சாகமாக நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமை இரவு “ஆக்சிஜன், மருந்துகள் தேவை அதிகரித்துள்ளது. யாரும் பதற்றப்பட வேண்டாம். தேவையான எல்லாவற்றின் உற்பத்தியையும் விரைந்து செயல்பட சொல்லி உத்தரவிட்டுள்ளோம்” என ஊடகங்கள் வழியே பிரதமர் அறிவிக்கிறார்.

கொரானாவின் இரண்டாவது அலை கடுமையாக இருக்கும் என பிற ஆய்வுகள் மட்டுமல்ல! மத்திய அரசின் சொந்த ஆய்வு கூட அதையே தான் உறுதிப்படுத்தியது! ஆனால் தலைநகரத்திலேயே கொரானா நோயாளிகள் ஆக்சிஜனுக்காக அவர்கள் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய கிராமங்களை நினைத்துப் பார்த்தால், சொல்லவே தேவையில்லை!

#படம் : அகமதாபாத்தில் மருத்துவமனையில் நுழைவதற்காக ஆம்புலன்சில் காத்திருக்கிறார்கள்.

#வினைசெய்

முனுசாமி ராமகிருஷ்ணன்

error: Content is protected !!