தி லெஜண்ட் – டிரைலர் ரிலீஸாயிடுச்சு!

தி லெஜண்ட் – டிரைலர் ரிலீஸாயிடுச்சு!

மிழகத்தில் மிகவும் பிரபலமான வணிக வளாகமாக திகழ்வது சரவணா ஸ்டோர்ஸ். அந்த சரவணா ஸ்டோர்சின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் கடந்த சில ஆண்டுகளாக தனது கடைக்கான விளம்பரங்களுக்கு தானே நடித்தார். இதன்மூலம் அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இதை அடுத்து , நடிப்பின் மேல் ஆசை கொண்ட அவர் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது.

இந்த நிலையில், இந்த “தி லெஜண்ட்”படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆரம்பம் முதல் ட்ரைலரில் அதிரடி காட்சியாக அதகளம் செய்ய, படத்தின் கதாநாயகன் தி லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தின் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மற்றும் நடிகர் பிரபு இன்னும் பலர் நடித்துள்ளனர். தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லெஜெண்ட்  ஹீரோ சரவணன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியது :

லெஜெண்ட் திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. காமெடி ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது

குறிப்பாக கதையம்சம் நன்றாக இருக்கும். முடிந்த அளவிற்கு எங்களுடைய பெஸ்ட் கொடுத்து இருக்கிறோம்

இந்தப் படத்திற்கு ஏன் இவ்வளவு பிரம்மாண்டமாக செலவு செய்திருக்கிறோம் என்றால் வெற்றி பெற வேண்டும் என்பதினால்தான்.


என்னுடைய ரோல் மாடல் ரஜினி சார் மற்றும் விஜய் சார் தான்

இதை எல்லாம் தாண்டி என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் படம் நன்றாக வந்துள்ளது. விவேக் சார் அவருடைய கதாபாத்திரத்தை நன்றாக நடித்துக்கொடுத்தார்

இந்த படத்திற்கு பிறகு நல்ல கதையம்சம் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்

முன்னதாக , இந்த படத்தில் இருந்து வெளியான “மொசலோ மொசலு” பாடலும், வாடிவாசல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வெளியான ட்ரைலரையும் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டும், 82 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்தும் வருகின்றனர்.