பத்மசேஷாத்ரி பள்ளி காம(ர்ஸ்) வாத்தியாரின் லீலைகள் அம்பலம்!

பத்மசேஷாத்ரி பள்ளி காம(ர்ஸ்) வாத்தியாரின் லீலைகள் அம்பலம்!

சென்னையின் ஆக்ஸ்போர்ட் ஏரியா சொல்லப்படும் கே.கே.நகரில் இயங்கிவரும் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் காமர்ஸ் வாத்தியார் மீது அந்த திடீரென பாய்துள்ள பாலியல் வன்முறை புகார் ஹாட் டாபிக்காக மாறிக் கொண்டிருக்கிறது. அதென்ன விசயம் என்று நம்ம கட்டிங் கண்ணையாவிடம் கேட்ட போது அவர் உடனடியா விசாரிச்சு அனுப்பி இருக்கும் முதல் தகவல் ஆந்தை ரிப்போர்ட் இதோ:

சிங்கார சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பத்ம சேஷாத்ரி பாலபவன் (பிஎஸ்பிபி) குழும பள்ளிகள் இயங்கி வருது. மிசஸ் ஒய்.ஜி.பி. என்று அழைக்கப்பட்ட கல்வியாளர் ராஜலஷ்மி பார்த்தசாரதியால் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், சென்னையில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், பள்ளிகள் இயங்கி வருது.

சென்னை கே.கே. நகர் பி எஸ் பி பி ஸ்கூலில் படிச்ச எக்ஸ் ஸ்டூடண்ட் ஒருவர் தன்னோட இன்ஸ்டாகிராம் பேஜில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்து வருது. பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் மீதுதான் இந்தப் புகார் எழுப்பப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸராக இருக்கும் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி க்ருபாளி என்பவர், அந்த ஆசிரியர் மீதான பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் புகாரை ஷேர் செஞ்சிருக்கார் அதுலே,’ஹாய் நீங்கள் நான் படிக்கும் ஸ்கூலின் முன்னாள் மாணவிதானே?. நானும் உங்களை மாதிரி காமர்ஸ் ஸ்டூடண்ட்தான். உங்ககிட்டே ஒரு கம்ப்ளையண்ட் பத்தி பேசணும். எங்களோட காமர்ஸ் டீச்சர் ராஜகோபாலன் கிளாசில் ஏகப்பட்ட மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வாரார். இது ஒருகட்டத்தில் எல்லைமீறி எனது ஃப்ரண்ட் ஒருத்தியை சினிமாவுக்கு அழைக்கும் வரை போயிடுச்சு.

கிளாஸ் சப்ஜெக்டுக்காக உருவாக்கிய குழுக்களில் ’பார்ன்’ வீடியோ லிங்க்களைப் அனுப்பறார். இதுகுறிச்சு எங்கள் ஹெ.ஓ டிகிட்டே புகார் அளிச்சும் ஒரு புரயோஜனமும் இல்லை. அதனால் நாங்கள் லீகன் ஆக்சந்லில் இறங்க தாயார் ஆயிட்டோம். இதுபோல நீங்கள் படிச்ச சமயத்திலும் இப்புடி நடந்துகொண்டதாகப் புகார் எதுவும் எழுந்துள்ளதா எனத் தெரியப்படுத்துங்கள். எங்களது சீனியரும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்’ அப்படீன்னு குறிப்பிடப்பட்டிருந்தது..

எக்ஸ் ஸ்டூடண்ட் & இன்ஸ்டா இன்ஃபுளுயன்ஸர் கிருபாளி இதை ஷேர் செஞ்ச நிலையில் அந்த வாத்தி மேல் ஏகப்பட்ட புகார்கள் குவியுது. ஒரு ஸ்டூடண்ட், “என்னோட ப்ராஜெக்டை ஏற்றுக்கொள்வதற்கா என்னைத் தனியா சினிமா பார்க்க அழைச்சார். நான் டீசண்டா மறுத்த நிலையில் என்னை வற்புறுத்த ஆரம்பிச்சு. ஒருக் கட்டத்துலே ’நான் உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேன்’ அப்படீன்னெல்லாம் பதில் அனுப்பினார். அவர் சாட் செய்த அம்புட்டையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைச்சிருக்கேன்’ -ன்னு தனக்கு அவர் பேசிய ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்திருந்தார்.

இது போக அரை நிர்வாணமாக இடுப்பில் துண்டோடு வீடியோ வகுப்புகளுக்கு வருவது, மாணவர்களை நள்ளிரவில் வீடியோ கால் செய்ய அழைப்பது போன்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய புகார்களும் குவிஞ்சுக்கிட்டு போகுது. இதை எல்லாம் விட கொஞ்சம் ஷாக் அளிக்கக் கூடிய இன்னான்னா 20 வருசமா அந்த ஸ்கூலில் காம(ர்ஸ்) வாத்தி(யாரக) இருக்கும் இவர் அதே ஸ்கூலின் பாலியல் குற்றப்புகார்கள் தொடர்பான பிரிவிலும் உறுப்பினராக இருக்கிறார் என்பதுதான் ஹைலைட்

ஒய்.ஜி மகேந்திரன் & ட்ரோல் புகழ் மதுவந்தி நிர்வகிக்கும் ஸ்கூல் இது என்று செய்தி பரவும் சூழலில் ’நானோ எனது மகள் மதுவந்தியோ நானோ எனது மகள் மதுவந்தியோ #PSBB பள்ளியை நடத்தவில்லை..உடனடியா அந்த (ஆ)சிரியர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும்…இந்த குற்றச்சாட்டுகளால் எனது தாயின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது- அப்படீன்னு மகேந்திரன் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கார்

மேலும்  ‘பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் தொல்லை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, புகார்கள் அளிக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தெரிவித்துள்ளார்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!