அரசு ஊழியர்கள் சம்பளத்தை பாதி ஆக்குங்க முதல்வரே!

அரசு ஊழியர்கள் சம்பளத்தை பாதி ஆக்குங்க முதல்வரே!

ட்டாயம் செய்ய வேண்டிய நேரமிது.. அப்பா 75 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் 40,000 ரூபாய் பென்ஷன். மகன்கள் இருவருக்கும் அரசு வேலை. லாக்டௌன் காலத்தில் பணிக்கு வர வேண்டாம் என அரசு சொல்லி சொல்லி விட்டது.. ஆக வேலை எதுவும் பார்க்காமலேயே மூவரும் அரசாங்கத்திடமிருந்து இரண்டு லட்ச ரூபாயை இந்த மாதம் பிடுங்க போகிறார்கள்.. இன்னொரு பக்கம் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால் பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தத்தளிக்கிறார்கள்..!இருவருமே மனித வர்க்கம் தான். இதில் என்ன மேல இருக்கிறர்கள் ஸ்பெஷல் கேட்டகிரி?

பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் கொடுக்கும் மடத்தனம் இதற்கு மேலும் நடக்கக்கூடாது. அரசு ஆசிரியர்கள் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உள்பட அத்தனை பேருக்கும் தான்.. நாடே அழிந்தாலும் நாங்கள் எதையும் விட்டுக்கொடுக்க முடியாது என்று அந்த நல்ல உள்ளங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஈவு இரக்கம் காட்டாமல் டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்புங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு 2 லட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்தார் ஜெயலலிதா. பொதுமக்களில் ஒருத்தர் கூட அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காரணம் அரசு ஊழியர்களால் பாதிக்கப்படாத பொதுமக்களே கிடையாது என்கிற அளவுக்கு மோசமான நிலைமை. எந்த அலுவலகம் போனாலும் நாயை விரட்டுவது மாதிரி மக்களை மிரட்டி நல்ல பெயரை சம்பாதித்து வைத்து இருந்தனர் அரசு ஊழியர்கள். அதனால்தான் இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் என்பதை கொண்டாடித் தீர்த்தனர் பொதுமக்கள்.

அதே நிலைமை தான் இப்போதும் பணிக்கு வராத அரசு ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக குறைத்து அதை மற்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. உள்ளாட்சி வருவாய்த்துறை போன்ற அதிகாரிகள் எல்லாம் 24 மணி நேரமும் மக்களிடம் சுற்றிச்சுற்றி வந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களும் அரசு ஊழியர்கள்தான்.

அலுவலகம் திறந்தால் லஞ்சத்தை சுளை சுளையாக வாங்கிக்கொண்டு கொட்டும் வட்டார போக்குவரத்து அலுவலக, பதிவுத்துறை அலுவலக ஊழியர்களும் அரசு ஊழியர்கள்தான். வீட்டில் ஜாலியாக இருக்கிறார்கள். அரசு ஊழியர்களிலேலேயே ஒரு தரப்பினர் நாயாய் உழைக்கிறார்கள். இன்னொரு தரப்பினர் ஜாலியாக வீட்டில் வந்து கொண்டிருக்கிறார்கள்.இருவருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் என்றால் இதையெல்லாம் தலையில் அடித்துக் கொள்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் கூட இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் யோசிக்காமல் இருக்கக்கூடாது. அரசுக்கு சமீபத்தில் ஏராளமானோர் வாரிக் கொடுத்த கொரானா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா? வேலைக்கு வராத அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்திற்கு ஈடாகாது இந்த நிவாரண நிதி ..யாரையும் பட்டினி போட சொல்லவில்லை கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தைரியமாக காரியத்தில் இறங்குங்கள் என்பதுதான்.

ஏழுமலை வெங்கடேசன்