உலகெங்கும் தெறிக்க விட்ட தளபதி ஸ்டாலின் 2021 குறும்படம் |

இப்போதுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் ஆளுங்கட்சியின் வீழ்ச்சியையும் அரசாங்கத்தின் செயல்படாத தன்மையையும் மக்கள் பார்த்துக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கிறார்கள். செயல்படாத தலைமையைக் கொண்ட இந்த ஆட்சியை எண்ணி வேதனைப்படும் ஒரு தி.மு.க தொண்டனின் கோபமும் குமுறலும் கொண்ட குரலாக இந்தக் குறும்படம் ‘தளபதி ஸ்டாலின் 2021’உருவாகியிருக்கிறது. இது மக்களின் குரலை எதிரொலிக்கிறது.
“ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல. காவியம்” என்று ஒரு தொண்டனின் குரலோடு தொடங்குகிறது குறும்படம். இப்போதைய ஆட்சியின் அவலங்களை வரிசையாக பட்டியல் இடுவதுடன் மு.க. ஸ்டாலின் மீது அவதூறு பரப்பி வருபவர்களுக்கும் சாட்டையடியாக அந்தக் கதாபாத்திரத்தின் குரல் ஒலிக்கிறது.
ஸ்டாலினை ஆதரிக்க வேண்டியது தமிழக எதிர் காலத்தின் கட்டாயம் என்பதை எடுத்துச் சொல்கிறது இப்படம். இக்குறும்படத்தை இயக்கி இருப்பவர் முத்துவீரா . இவர் ஒரு திரைப்பட இயக்குநர் யோகிபாபுவை வைத்து ‘ சோப்பு டப்பா’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார் .இதைத் தயாரித்துள்ளவர் பி. கிருஷ்ணமூர்த்தி. இக்குறும்படத்தை நடு சென்டர் டிவி உருவாக்கியுள்ளது. நடு சென்டர் டிவி நிறுவனர் செ.ஹரி உத்ரா ஏற்கெனவே ‘தெருநாய்கள்’, ‘கல்தா’ , ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ ,’அரசியல் பழகு ‘ போன்ற படங்களை இயக்கியுள்ளவர். ‘சோப்பு டப்பா’ படத்தைத் தயாரித்துள்ளார்.
இக் குறும்படத்துக்கு நவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ்குமார் படத்தொகுப்பு செய்து உள்ளார் .’காக்காமுட்டை’ சசிகுமார் ,சுனில், சாதிக் ஆகியோர் நடித்துள்ளனர்.நாட்டில் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை மறைத்து திசைதிருப்பிடுவதற்காக மு.க. ஸ்டாலின் மீது திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்புகிறவர்களுக்கு இக்குறும்படம் சரியான பதிலடியாக இருக்கும் என்று நம்புகிறது படக்குழு.
ஒரு சராசரி கட்சித் தொண்டனின் நேர்மையான கோபக் குரலாக இப்படம் உருவாகி இருக்கிறது.உலகெங்கும்* தெறிக்கவிடும்.” என்கிறார் இயக்குநர்.
https://www.youtube.com/watch?v=U7j1UfCDe5s&feature=youtu.be