குட்டைப் பாவாடையுடன் ஸ்கூலுக்கு வந்த ஸ்டூடண்ட்ஸ்!

குட்டைப் பாவாடையுடன் ஸ்கூலுக்கு வந்த ஸ்டூடண்ட்ஸ்!

அரைக்கால் சட்டை அணிய அனுமதியில்லை என்று பள்ளியில் கூறப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்தின் எக்ஸிடெர் நகரில் 30 மாணவர்கள் குட்டைப் பாவாடை அணிந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். படு ஹாட்டான  சீசன் நிலவுவதால் தங்களுடைய சீருடையை மாற்றக் கோரி இங்கிலாந்தின் எக்ஸிடெர் நகரிலுள்ள ஐஎஸ்சிஏ அகாடமி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்று ‘டிவான் லைவ்’ செய்தி இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது, “நாங்கள் அரைக்கால்சட்டை அணிய அனுமதிக்கப்ப டவில்லை. நான் நாள் முழுவதும் முழுக்கால்சட்டையோடு அமரப் போவதில்லை. சற்று வெப்பமாக உள்ளது” என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு மாணவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் பள்ளியின் சீருடையில் அரைக்கால்சட்டை இல்லை என்று தலைமையாசிரியர் அர்மீ மிஷேல் கூறியிருக்கிறார். அரைக்கால் சட்டை சீருடையின் ஒரு பகுதியாக இந்தப் பள்ளிக்கூ டத்தில் இல்லை என்கிற கொள்கை முடிவு, இந்தப் போராட்டத்திற்கு பிறகு மறு பரிசீலனை  செய்யப்படும் என்று மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தலைமை யாசிரியர் இது கருத்தில் கொள்ளப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது வெப்பம் மயமாதல் கார்ணமாக கடந்த சில நாட்களாக, முன்பில்லாத வகையில் வெப்பம் அதிகரித்திருப்பது தெரிகிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் முடிந்தவரை வசதியாக இருக்கச் செய்யவே விரும்புகிறோம் என்று மிஷேல் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் தற்போதைக்கு மாணவர்களுக்கான சீருடையில் தற்போது அரைக்கால்சட்டை இல்லை. மாணவர்களிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கலந்துரையாடாமல், மாற்றங்களையும் கொண்டுவர விரும்பவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
சூடான வானிலை அதிகமாகும்போது, எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று தலைமையாசிரியர் தெரிவித்திருக்கிறார்.

Related Posts

error: Content is protected !!