இணைய தள நீதிமன்றத்தை வளர்த்தெடுக்க மத்திய அரசு நிறுவனத்துடன் கைகோர்க்கிறது ஜூபிடைஸ்!
பல்வேறு தாவாக்களைத் தீர்க்க இணையதளம் மூலமாக மென்பொருள் ஒன்றின் துணையுடன் சண்டிகரைச் சேர்ந்த ஜூபிடைஸ் நிறுவனம் உருவாக்கி அதை பிரபலப்படுத்தியும் வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் நிறுவனமான டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டெண்ட்டஸ் ஆஃப் இந்தியாவுடன் (டி சி ஐ எல்) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது ஜூபிடைஸ். டி சி ஐ எல் மத்திய அரசின் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு மற்றும் ஆலோசனை சேவைகளை அளித்து வரும் நிறுவனமாகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் அரசு தொடர்பான அமைப்புகள் ஆகியவற்றின் சிறந்த சேவைக்கு வழி ஏற்பட்டுள்ளது. இந்த உறவானது உச்ச நீதிமன்றம் மின்னணு முறையில் முறையீடுகளைத் தீர்க்க வலியுறுத்தி வரும் நிலையில் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுதும் சுமார் 4 கோடிக்கும் அளவிலான வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இச்சூழ்நிலையில் கொரோனா பொது முடக்கம் இன்னும் நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து டி சி ஐ எல்லின் திட்ட இயக்குநர் ராஜீவ் குப்தா கூறுகையில், “ எங்களது நிறுவனம் 1978 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து டெலி எஜூகேஷன், சி சி டி வி கண்காணிப்பு எனப் பல தொழில்நுட்பங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்காக வழங்குவதில் முன்னணியில் நிற்கிறோம். அதே வரிசையில் ஜூபிடைஸ்சினுடனான இந்த ஒப்பந்தமும் நாட்டில் நிலவும் வழக்குகளின் தேக்கத்திற்கு தானாகவே விரைவாகத் தீர்வு தரும் முறையில் அதி முக்கியத்துவம் தருகிறது.
உலகம் முழுதும் சுமார் 5 பில்லியன் மக்களுக்கு எவ்விதமான நீதியும் கிடைக்கின்ற சூழல் இல்லை. நவீன தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் போன்றவற்றின் துணையோடு நேரடியாக பங்கேற்கத் தேவையில்லாத, அறிவுபூர்வமாக செயல்படும் ”நீதி தொழில்நுட்பத் தளமான” ஜூபிடைஸ் ”நீதியை ஒரு சேவையாக” வழங்குகிறது. குறைத் தீர்ப்பு, மத்தியஸ்தம், சமரசம், பேச்சுவார்த்தையில் உதவி மற்றும் நடுவாண்மை ஆகியவற்றில் இந்த இணையதள நீதிமன்ற சேவை சிக்கல்களுக்கு தீர்வு தருகிறது. துவங்கியதிலிருந்து ஜூபிடைஸ்சானது இதுவரை சுமார் 6000 வழக்குகளை ஏற்றுள்ளது. இதில் சுமார் 3000 வழக்குகளுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு கண்டுள்ளது. ”எங்களது தொழில்நுட்ப முயற்சியில் இதர தாவா தீர்ப்பு தொழில்நுட்பளைப் போலின்றி இன்றுள்ள நுட்பமான முறையில் மிகவும் திறனுடன் செயல்படும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எங்களது சேவையில் குறைந்த செலவில், மிகுந்த வசதியுடன் தாவா தீர்ப்பை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்” என்கிறார் ஜூபிடைஸ்சின் நிறுவுனர், தலைமைச் செயல் அதிகாரியான ராமன் அகர்வால்.
இந்த தொழில்நுட்பம் மூலம் உள்நாட்டு தாவா மட்டுமின்றி எல்லைக்கடந்த முறையீடுகளையும் கூட தீர்த்துக் கொள்ள முடியும். நீதியை அணுகுதல், செலவு குறைவு, வெளிப்படையான மற்றும் பொறுப்பேற்கும் முறையில் செயல்படும் ஜூபிடைஸ் தொழில்நுட்பம் மூலம் நீதியைத் தேடுவோர்க்கு ஆற்றலையும், அதற்கான சாத்தியத்தையும் அளிக்கிறது.