உயர் கல்வியில் சேர்வோர் பட்டியலில் தமிழகம் முதலிடம்!

உயர் கல்வியில் சேர்வோர் பட்டியலில் தமிழகம் முதலிடம்!

பள்ளிக் கல்வியும், உயர் கல்வியும் நாட்டின் வளர்ச்சியை மாற்றும் வல்லமை படைத்தவை. கற்பவர்களின் விகிதம் உயரும்போது நாடும் முன்னேறும். தமிழகத்தில் உயர் கல்வித் துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கல்வி வளர்ச்சி காரணமாக, நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழகம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆம்.. பள்ளிக் கல்வியை முடித்து, உயர் கல்வி படிப்போரின் விகிதம் இந்தியாவில் 24 சதவீதமாகஇருந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் இது 44 சதவீதமாக உள்ளது. இந்த உயர்வுக்குக்காரணம், பொறியியல், மருத்துவம், கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்க தொலைநோக்குபார்வையோடு தனியாருக்கு அவர் அனுமதி அளித்ததேயாகும். அதன் விளைவாக தற்போதும் கூட உயர் கல்வியில் அதிகம் சேர்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

இந்திய அளவில், 2016 – 2017 கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்ந்த 18 -23 வயது மாணவர்களின் பட்டியலை மத்திய மனிஇதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “நாடு முழுவதும் உயர் கல்வியில் சேர்பவர்கள் பட்டியலில் தமிழகம் 46.9% முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “நாடு முழுவதும் உயர் கல்வியில் சேர்பவர்கள் பட்டியலில் தமிழகம் 46.9% முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் உயர் கல்வியில் சேர்வதில் 45.6% பெண்களும் 48.2% ஆண்களும் உள்ளனர். உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பட்டியலில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மாநிலங்கள் பின் தங்கியுள்ளன. நாட்டின் சராசரி அளவு 35.7% உள்ள நிலையில் பீகார் 14.4%, அசாம் 17.2%, ஒடிசா 18.5%, மேற்குவங்கம் 21% பெற்று கடைசி இடங்களில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 24.9% உள்ளது. இந்தப் பட்டியலில் யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை 56.1% பெற்று சண்டிகர் முதலிடத்தில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

நம் தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் ஒன்பது லட்சம் மாணவர்களில், எட்டு லட்சம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். அதில் 1.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்கின்றனர். 3 லட்சம் மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், சட்டம் மற்றும் பிற படிப்புகளில் சேர்கின்றனர். 2012 -13 கல்வியாண்டில் இந்தியாவில் உயர் கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கை 30.2% இருந்தது. 2016-17இல் 35.7% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!