32°C

Tag: <span>ஜனநாயகம்</span>

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலைத் திருடுகிறது!- ராகுல் அதிரடிப் புகார்! Exclusive

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலைத் திருடுகிறது!- ராகுல் அதிரடிப் புகார்!

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, இன்று டெல்லியில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே திட்டமிட்டு திருடப்படுவதாகவும், இதற்காக ஜனநாயக அமைப்புகளான தேர்தல் ஆணையம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கர்நாடகாவில் நடந்தது என்ன? – ராகுல் காந்தி வெளியிட்ட ஆய்வு விவரங்கள் ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, […]

August 7, 2025 admin
எதிர்க்கட்சித் தலைவரின் வலிமை, ஜனநாயகத்தின் எதிர்காலம்! Exclusive

எதிர்க்கட்சித் தலைவரின் வலிமை, ஜனநாயகத்தின் எதிர்காலம்!

இந்திய அரசியலில், ஆளும் கட்சிக்கு இணையாக ஒரு வலுவான எதிர்க்கட்சியின் பங்களிப்பு மிகவும் அவசியம். அதன் தலைவர், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, ஜனநாயகத்தின் காவலனாக செயல்பட வேண்டும். ஆனால், தற்போது இந்திய அரசியலில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சி மாநில தேர்தல்களில் சில வெற்றிகளைப் பெற்றாலும், அது ராகுல் காந்தியால் அல்ல, மாறாக அவருடைய தலைமை இருந்தபோதிலும் தான் வெற்றிபெற்றது என்ற […]

August 3, 2025 admin
பிரிட்டனில் வாக்கெடுப்பு வயது 18லிருந்து 16 ஆகக் குறைக்க முடிவு! Exclusive

பிரிட்டனில் வாக்கெடுப்பு வயது 18லிருந்து 16 ஆகக் குறைக்க முடிவு!

பிரிட்டனில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்க ஒரு புதிய முன்மொழிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, இளைஞர்களுக்கு அரசியல் முடிவுகளில் அதிக பிரதிநிதித்துவத்தையும், பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைக்கு வழி வகுத்துள்ளது. குறிப்பாக 16 வயது பூர்த்தியடைபவர்களின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளது. முன்மொழிவின் நோக்கம் இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், இளம் தலைமுறையினரை ஜனநாயக செயல்முறையில் இன்னும் ஆழமாக ஈடுபடுத்துவது ஆகும். 16 மற்றும் […]

July 18, 2025 admin
மோடி ஆட்சி: 11 ஆண்டுகள் – பெரும் எதிர்பார்ப்புகளும், எதார்த்தத்தின் ஏமாற்றங்களும்! Exclusive

மோடி ஆட்சி: 11 ஆண்டுகள் – பெரும் எதிர்பார்ப்புகளும், எதார்த்தத்தின் ஏமாற்றங்களும்!

2014 மே 26, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு பொன் எழுத்து பொறிக்கப்பட்ட நாள் என்று பரவலாகக் கொண்டாடப்பட்டது. குஜராத்தின் அசுர வளர்ச்சிப் பிம்பத்துடன், “அச்சே தின்” (நல்ல நாட்கள்) என்ற மந்திர வார்த்தையுடன் இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்குவார் என்ற கனவுகள் இந்தியர்கள் மனதில் விதைக்கப்பட்டன. ஆனால், 11 ஆண்டுகள் கடந்த நிலையில், அன்று விதைக்கப்பட்ட பெரும் கற்பனைகளும், கணிப்புகளும் எதார்த்தத்தில் எவ்வாறு எதிரொலித்தன என்பதை அலசினால், ஏமாற்றமே […]

May 26, 2025 admin
இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம்: ஒரு சிறப்புப் பார்வை! Exclusive

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம்: ஒரு சிறப்புப் பார்வை!

பத்திரிகை சுதந்திரம் என்பது ஒரு ஜனநாயக நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. பத்திரிகை சுதந்திரம்தான் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்கான அளவுகோல். பத்திரிகை சுதந்திரம்தான் மக்கள் தகவல்களை எளிதாகப் பெறவும்; விழிப்பணர்வைப் பெறவும்; முன்னேறவும் வழிவகுக்கிறது.இந்தியாவில், அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவு கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை உறுதி செய்கிறது, இதில் பத்திரிகை சுதந்திரமும் அடங்கும். இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பரந்த மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, பத்திரிகை சுதந்திரம் மக்களின் குரலை ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு […]

May 3, 2025 admin
2023-24 நிதியாண்டில் எந்த கட்சி, எவ்வளவு, யாரிடம் நன்கொடை பெற்றது? Exclusive

2023-24 நிதியாண்டில் எந்த கட்சி, எவ்வளவு, யாரிடம் நன்கொடை பெற்றது?

ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association for Democratic Reforms – ADR) என்பது இந்தியாவில் அரசியல் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பாகும். இந்தியாவின் தெளிவற்ற அரசியலை துணிச்சலான பேராசிரியர்கள் குழு கையில் எடுக்கும்போது என்ன நடக்கும்? ஒரு புரட்சி தொடங்குகிறது! ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் கண்காணிப்புக் குழுவாக இருந்து வருகிறது, சந்தேகத்திற் குரிய வேட்பாளர்களை அம்பலப்படுத்துதல், கருப்புப் பணத்தை அம்பலப்படுத்துதல் மற்றும் கடுமையான […]

April 8, 2025 admin
இந்தியாவில் கோடீஸ்வர MPs-களின் எண்ணிக்கை உயர்வு: ஓர் ஆந்தைப் பார்வை! Exclusive

இந்தியாவில் கோடீஸ்வர MPs-களின் எண்ணிக்கை உயர்வு: ஓர் ஆந்தைப் பார்வை!

இந்தியாவில் கோடீஸ்வர நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MPs) எண்ணிக்கை கடந்த சில தசாப்தங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது இந்திய அரசியலில் செல்வத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும், பொருளாதார பாகுபாடுகள் நிறைந்த ஒரு நாட்டில் அரசியல் அதிகாரம் பெரும்பாலும் பணம்படைத்தவர்களிடம் செல்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. Association for Democratic Reforms (ADR) போன்ற அமைப்புகள் இதுகுறித்து வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், இதை விரிவாகப் பார்ப்போம். 2009 ஆம் ஆண்டு: 16வது மக்களவையில், 543 உறுப்பினர்களில் 315 பேர் […]

March 27, 2025 admin
இந்த தேர்தலில் ஜெயித்தது  இந்திய ஜனநாயகம்! Exclusive

இந்த தேர்தலில் ஜெயித்தது இந்திய ஜனநாயகம்!

பாஜக 1989ல் நடந்த தேர்தலில் 88 சீட்டுகள் பெற்று இரண்டாம் இடத்துக்கு வந்தது. அப்போது அதை வர்ணித்து எல் கே அத்வானி பேசுகையில் ‘Winner comes second!’ என்றார். அதாவது இரண்டாவது வந்தவர்தான் வெற்றியாளர் ஆகிறார் என்று அர்த்தம். அப்போது அது உண்மைதான். காரணம், அதற்கு முந்தைய தேர்தலில் இரண்டே இரண்டு சீட்டுகள் வென்றிருந்த பாஜக ஐந்தே ஆண்டுகளில் 85 சீட்டுகள் பெற்றது ஒரு மகா அதிசயம். அதற்குப் பின்னணியில் ராமர் கோயில் இயக்கம் இருந்தது என்றாலும், […]

June 5, 2024 admin
குஜராத்தில் நேற்று நடந்த ஜனநாயகப் படுகொலை! Running News

குஜராத்தில் நேற்று நடந்த ஜனநாயகப் படுகொலை!

நேற்று நள்ளிரவில் குஜராத்தில் நடந்த கூத்தில் இந்திய ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டது. நாடு விடுதலைப் பெற்று 70 ஆண்டுகளில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறும் நிகழ்வுகளும், ஆட்சி கவிழ்ப்புகளும் 1985 வரை நடந்தேறின. பிரிவு 356ஐ கொண்டு, உச்ச நீதிமன்றம் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை மத்திய அரசு விருப்பத்திற்கேற்றவாறு மாநில அரசுகளை கவிழ்த்தது. இப்படி ஜனநாயகத்திற்கு எதிரான கூத்துகள் நேற்றைய குஜராத் தேர்தல் வரை நடந்தேறியுள்ளது. இதற்கு காரணமென்ன? நம்முடைய ஜனநாயக அமைப்புகளில் கோளாறுகள் அதிகமாக […]

August 9, 2017 admin