புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு!

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு!

ந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்களின் சீஃப்-பாக இருந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிகாலம் நேற்றுடன் (12-4-2021) நிறைவடைந்தது. அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு மூத்த தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவதே வழக்கம். இதன் அடிப்படையில், சுஷில் சந்திரா பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, இந்தியாவின் 24ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
அவருடைய பதவிக் காலம் 2022ம் ஆண்டு மே 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்திரப்பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக் காலம் 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைகின்றன. இதனால், சுஷில் சந்திரா தலைமையின் கீழ் இம்மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடத்தப்பட உள்ளது.

சுஷில் சந்திரா கடந்த 2019 பிப்ரவரி 14ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் முன்பாக தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

சுஷில் சந்திரா ஐ.ஆர்.எஸ். தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசு பணிக்கு வந்தார். முன்னதாக மத்திய நேரடி வரி வாரியத்தின் (சிபிடிடி) தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவரது தலைமையில், சட்டவிரோதச் செல்வத்தையும் கறுப்புப் பணத்தையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் 2017ஆம் ஆண்டில் “ஆபரேஷன் கிளீன் மணி” என்ற திட்டத்தை வரி வாரியம் அறிமுகப்படுத்தியதாக்கும்.

error: Content is protected !!