ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்!

பலரை காவு வாங்கிக்கொண்டிருக்கும் கொரொனாவுக்கு எதிராக அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக்– வி கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், அண்மை நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக்–வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த தடுப்பூசி, ஏற்கனவே 55 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளதையடுத்து, தற்போது இந்தியாவிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 3-வது தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.