June 2, 2023

அப்பா என்ற தகப்பன் சாமி..!

அப்பா – இவர் இல்லாமல் நீங்களோ .. நானோ யாருமே இந்த உலகத்தில் இல்லை….

அதே போல் அப்பா என்ற ஒற்றை சொல்லை எல்லோருக்கும் பொதுவானதாய் ஆக்கவும் முடியாது.

யாரை வேண்டுமானாலும் நீங்கள் என் தாய் போல என கூப்பிட முடியும், ஆனால் அப்பா என்பவர் எப்போதும் ஒருவரே…….!

பலருக்கு அப்பா ஆசானாக, சிலருக்கு ஆசாமியாக, சிலருக்கு குலசாமியாய் இருப்பவர் தான் இந்த தந்தை என்னும் மனித பிரம்மா.

எல்லாருக்கும் அம்மா எப்படி பிடிக்குமோ அதே அம்மாவுக்கு கண்டிப்பாய் பிடிக்கும் முதல் ஆள் – அப்பாதான்.

அப்பாவின் கம்பீரம், கட்டுப்பாடு, கன்னியம் சற்று தூரத்தில் சில பிள்ளைகளை வைத்தாலும் ஒரே அறையில் மகனோடு மதுவருந்தும் அப்பாவும் இவ்வுலகில் உண்டு.

அப்பா தான் ஆண்பிள்ளைகளின் முதல் ரோல் மாடல். நிறைய பேருக்கு இளவயதில் டாக்டர் ஆகவேண்டும், பொறியாளர் ஆகவேண்டும் என்ற ஆசையை விட…

தன் தந்தையை போல் ஆக வேண்டும் என்பதே, முதல் தோழனாகவும் தந்தை தான் பட்டியலில் முதல் வரிசையில் வருவது எல்லோருக்கும் தெரிந்ததே.

நடமாடும் தெய்வமாய் தாய் இருந்தாலும் அதை குடிகொண்ட கோயில் தான் இந்த தந்தை. பெரும்பாலான ஆண் பிள்ளைகளுக்கு தந்தை ஒரு ஒர் உயிர் இரு உடலாகத்தான் இருப்பார்கள் – இன்னும் பல தந்தை மகன் உறவை பார்த்து பிரமிக்காதவர்கள் கிடையவே கிடையாது.

பெண் பிள்ளைகளுக்கோ சொல்லவே வேண்டாம் தந்தை தான் முதல் ஹீரோ தந்தை என்ற ஒற்றை சக்தி பல பெண் பிள்ளைகளை இன்று நாடாளும் அளவு கொண்டு சென்றது தந்தையின் சாதனை தானே தவிர தாயோடது அல்ல.

அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாய் பருவ மாற்ற காலத்தில் தந்தையின் தூர இடைவெளி சமுதாய பார்வைக்காக அதிகமாகும் போது அந்த பெண் பிள்ளையை விட தந்தையே அதிக புத்திரி சோகத்தில் மூழ்குகிறார்.

எப்பேர்பட்ட கம்பீர மனிதனும் – தன் பிள்ளை சமைந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாகவே நடை பிணமாகிறான்.

எத்தனை சவால்களை சமாளித்து தன் வீட்டு எவர் க்ரீன் ஹீரோவாய் இருக்கும் தகப்பன் – தன் பெண் கல்யாணம் ஆகி போன வீட்டுக்குள் நுழையும் போது 6 அடி மனிதன் கூட கூனி குறுகி நிற்பதை தான் பல முறை கண்டிருப்பீர்கள்……

தன் உடன் பிறந்தவர்களுக்கு கூட தந்தை
ஒரு சிம்ம சொப்பனமாய் இருப்பார்.

ஆனால் பாருங்கள் அவர் பெற்ற பெண்ணின் மாப்பிள்ளையிடம் மட்டும் தன்னை ஒரு கடன்காரன் அளவுக்கு தாழ்த்தி…

தன் மகன் வயதை ஒத்த மருமகனுக்கு தன் தந்தைக்கு கொடுக்கும் மரியாதையை முறையாய் மனிதர் தான் இந்த தகப்பன் சாமி.

பலருக்கு தந்தையின் அருமை அவ்வளவு தெரியாமல் போயிருந்தாலும் – என்னை போல 1 வயதில் தந்தையை இழந்த பல பேருக்கு தெரியும் அந்த அருமை என்னவென்று…..

கூடவே இருக்கும் தந்தையின் அருமையை விட – இல்லாத தந்தையின் அருமையே ஓங்கி நிற்கிறது என்பது மறுக்கப்படாத உண்மை.!! தந்தை என்ற தகப்பன் சாமி உயிரோடு இருக்கும் போதே அவருடன் வாழுங்கள், அவர் இறந்தபின் அவர் நினைவில் வாழாதீர்கள்…..தாயுமான அத்தனை பெண்களும் தன் தந்தையை மறந்த சரித்திரமே இல்லை

எல்லா ஆண்களுக்கு தந்தை வாழ்த்துக்கள்.!!