முடிவுக்கு வரும் முட்டாள் சினிமாவும், முடிவில்லாத வரி ஏய்ப்பும்!

முடிவுக்கு வரும் முட்டாள் சினிமாவும்,  முடிவில்லாத வரி ஏய்ப்பும்!

சினிமா தவறானவர்கள் கைகளுக்கு போய் பல வருடங்கள் உருண்டோடி விட்டது! அவர்கள் தெய்வங்களின் மறுவடிமாகவே பார்க்க ஆரம்பித்த நிலையில், அதை தவறானவரகள், தவறான பாதையில் கொண்டு செலுத்தினார்கள். எம்ஜிஆரின் வெற்றிக்கு பிறகு அதுவே அரசியலுக்கும், ஆட்சிக்கும் பின்புற வாசல் என்றாகிவிட்டது. நாலு படம் தொடர்ந்து வெற்றி பெற்றால் அடுத்த முதலராக கனவுகான ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் எதை செய்தாலும், சொன்னாலும் அது வேதமாக பார்க்கப்பட்டு, அது சாத்தானின் ஒலமாக அறியப்பட்ட பின்பு அதனால் லாபம் அடைந்தவர்கள் முட்டுக்கொடுக்க தொடங்கினார்கள். இருந்தாலும் அவர்கள் வெற்றி என்பது பலம், பணம் தந்தது, அடியாட்கள் தைரியம் தந்தது.

இந்த சூழல் வட இந்தியாவில் அடியோடு வீழ்த்தப்பட்டுள்ளது. வெளிவந்த 26 படங்களில் ஒன்றே ஒன்று மட்டும் சூப்பர் ஹிட், அது காஷ்மீர் ஃபைல்ஸ் என்பதை அறிவோம். வெகு சில சமாளித்து கறைசேர்ந்ததும் மற்ற பலவும் படு தோல்வி அடைந்தது. ஆனால் அந்த மாற்றங்கள் இன்னும் பரிபூர்ணமாக தமிழ் சினிமா உலகில் மாறவில்லை. மாற்றங்கள் இருந்தாலும் அது மறைக்கப்படுகிறது, அதற்கான அறிகுறிகளை காண முடிகிறது. சமீபத்தில் வந்த விருமன் ஏதோ சூப்பர் ஹிட் எனும், வசூலில் சாதனை என்றும் சொல்கிறார்கள். ஆனால் தியேட்டரில் வார இறுதி நாட்களில் கூட வெறிச்சோடி கிடப்பதை ஆன்லைன் புக்கிங்கில் ஷோ தொடங்குவதற்கு முன்பு பார்க்க முடிகிறது. அப்படியெனில் அந்த வெற்றி எப்படி வருகிறது?

கருப்பு பணத்தை மாற்றும் மிக முக்கியமான யுக்தியாகவே சினிமா பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இளவரசர் படம் படு தோல்வி அடைந்தது. இலவசமாக டிக்கெட் கொடுத்தார்கள், பார்க்க ஆட்கள் வரவில்லை, கட்சிக்காரர்களை கட்டாயப்படுத்தினார்கள், ம்ஹூம். இலவச டிக்கெட்டோடு பிரியாணி கூட கொடுத்து பார்த்தார்கள். அதற்காக மூனறு மணி நேர கொடுமையை ஏற்க முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

அதை தடுப்பது எப்படி?

படம் எடுக்கும்போது கொடுக்கும் பண பரிவர்த்தனை முறையாக கணக்கில் காட்ட வேண்டும். அதை எப்படி கட்டுப்படுத்தினாலும் குறைத்து காட்டி பொய் கணக்கு காட்டுவார்கள் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் தியேட்டரில் செய்ய்ப்படும் டிக்கெட் விற்பனை அத்தனையையும் ஆன்லைன் புக்கிங் மூலம் செலுத்தி கணக்கில் எளிதாக கொண்டு வர முடியும். இங்கே விற்காத டிக்கெட் கூட விற்பதாக காட்டுகிறார்கள். ஏனெனில் தமிழில் பெயர் வைத்தால் வரியில்லை என்று ஒரு சட்டம் தமிழக அரசு பல வருடங்களாக நடப்பில் உள்ளது. அதனால் அப்படி விற்றதாக கணக்கு காட்டுகிறார்கள், அது கருப்பு பணத்தை வெள்ளையாக்க முடிகிறது. இப்போது புரிகிறதா, கட்டுமரம் எதற்காக இந்த சட்டத்தை கொண்டு வந்தது என்று? இது மட்டுமல்ல, இலவசமாக அரசு பணத்தில் டிவி கொடுத்து கேபிள் கனெக்‌ஷன் மூலம் கொள்ளை அடித்த திருட்டு குடும்பமல்லவா அது?

குற்றம் சுமத்துவது எளிது. ஆனால் இதை எப்படி தடுப்பது? இது ஒவ்வொரு Transaction ஐ அதிகாரிகால் கண்கானிக்க முடியாதும் ஆனால் கணினிகள் கண்கானிக்க முடியும். இருந்தும் அதிலும் ஏமாற்றுவது தொடர்கிறது. உதாரணமாக ஹோட்டலில் 5% GST போடுகிறாகள். நமக்கு கம்ப்யூட்டர் பில் போலத்தான் தெரியும். ஆனால் அவை நெட்வொர்க்கில் இணைக்கப்படாததால், நம்மிடம் வாங்கிய அந்த வரியையும் சேர்த்து எடுத்துக்கொள்கிறார்கள். அதை அதிகாரிகளால் மட்டும் தடுத்துவிட முடியாது. மக்கள் ஒவ்வொருவருக்கும் அந்த பொறுப்பு அவசியமாக்கப்பட வேண்டும்.

இது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை. ஒவ்வொரு சினிமா டிக்கெட்டும் ஆன்லைன் மூலமே புக் செய்ய வேண்டும் அல்லது பின்பு அப்டேட் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் குறைந்தது 5% ஆவது GST போட வேண்டும். ஏன் பாலுக்கு வரி போடும்போது சினிமாவிற்கு போடக்கூடாதா? முன்பெல்லாம் போலி பில்கள் வாங்குவார்கள், இப்போது அதை எளிதாக செய்ய முடிவதில்லை. ஏனெனில் அதற்குரிய GST கட்டியாக வேண்டும் என்பதால். அதன் மூலம் வரும் லாபங்கள் என்னவென்று அந்த தனியார் நிறுவனத்தின் நிகர லாபம் உயர்ந்து ஆட்டோ மேட்டிக்காக லப கணக்கில் வரியாக வந்துவிடும். இதன் மூலம் வந்த பணம் லீக்கேஜ் இருந்தாலும் சுழற்சியை ஓரளவு கணக்கில் கொண்டு வர முடியும்.

சினிமாவை அடுத்து கருப்பு பணம் புழங்கும் இடம் ரியல் எஸ்டேட் பிஸினஸ். அடுத்து பள்ளிகள், மருத்துவமனைகள். இவைகள் எல்லாவற்றிற்கும் பில்கள் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். அதில் 0 tax ஆக இருந்தாலும் அது GST Transaction ID அவசியம் இருக்க, ஒவ்வொரு இந்திய குடிமகனும், தான் கொடுத்த GST யை சரிபார்த்துக் கொள்ள வருமானவரித்துறை வசதிகள் App அல்லது வலைதளத்தில் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும்போது, அந்த Transaction பொய்யாக இருக்கும் பட்சத்தில், அதை கண்டுபிடிக்க உதவிய அவருக்கு வெகுமதிகளை அரசாங்கம் கொடுத்து ஊக்குவிக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு ஊழலை தடுக்க கொண்டுவரும் துறை அதைவிட மோசமான ஊழல் துறையாக இருக்கிறது. அதனால் இதை மக்கள் முன்னெடுப்பாக மாற்றி ஒவ்வொரு குடி மக்கனளயும் ஈடுபடுத்தினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

இது போன்ற வேலைகளை எளிதாக்க, வியாபார நிறுவனங்களில் வரும் பில்களில் பார் கோடுகளை இணைக்கலாம். அதன் மூலம் அரசு கொடுக்கும் எளிதான ஒரு ஆப் மூலம் அதை ஸ்கேன் செய்து வேலையை எளிதாக்க முடியும். அந்த பரிவர்த்தனை அரசிடம் இருக்கும் டேட்டாபேஸில் இல்லை என்றால் அது நடவடிக்கைக்கான Auto generated report மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு SMS அல்லது email அல்லது துறையிலேயே அவர்கள் அக்கவுண்டில் உள்ள தொடர்பு மூலம் மூலம் தெரியபடுத்தலாம். தேவையான இடைவெளியில் அதற்கான தரகுகளை தரவில்லை என்றால் பெனால்டியை கொடுத்து, அதில் அவருக்கு வரும் கிரிடிட்களில் கழிக்கவும் செய்யலாம். இதில் 50% வரை ஏமாற்றும் அரசு நிறுவனங்களான டாஸ்மாக் போன்றவை முதலில் சேர்க்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த அதிகாரிகளிடம், அரசியல் வாதிகளிடம் ஷேர் செய்யுங்கள். இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிடுவோம். மகத்தான இந்திய தேசத்தை உருவாக்கிடுவோம்!

மரு. தெய்வசிகாமணி

error: Content is protected !!