ஸ்டார் விஜய்-யில் புத்தம் புதிய நிகழ்ச்சி :-BB ஜோடிகள்!
ஸ்டார் விஜய் டிவில் வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு BB ஜோடிகள் எனும் புத்தம் புதிய நடன ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது. இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சிறந்த நடனப் போட்டியாக இருக்கும்.
பிக் பாஸின் நான்கு சீசன்களிலிருந்தும் பிரபலமான நபர்கள் ஜோடிகளாக இந்த போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு சுற்றுகள் மூலம் தங்களின் நடன திறமையை வெளியிடுவர். ஒவ்வொரு வாரமும் நடன ஜோடிகள் சில தலைப்புகள் மற்றும் தீம்களில் பல்வேறு நடனச்சுற்றுக்களில் போட்டியிடுவர்.
BB ஜோடிகளின் நடுவர்களாக பிரபல நட்சத்திரங்கள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இடம்பெறுகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் BB ஜோடிகளின் நடன மற்றும் அவர்களின் உணர்ச்சிவெளிப்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரம் ஒரு ஜோடி வெளியேற்றப்பட்டு இறுதியில் 4 ஜோடிகள் பிரம்மாண்ட மேடையில் இறுதிப்போட்டியில் பங்குபெறுவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் பல்வேறு சீசன்களின் பிரபலங்கள் இந்த நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பவர்கள் ஆவர்.
சிவானி – சோம் சேகர், கேபிரியல்லா – ஆஜீத், அனிதா – ஷாரிக், நிஷா – தாடி பாலாஜி, வனிதா – சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா – ஜித்தன் ரமேஷ், ஜூலி – சென்றாயன், பாத்திமா பாபு – மோகன் வைத்யா ஆகியோர் நடனமாடுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் நகைச்சுவைக்கு பெயர் போன ஈரோடு மகேஷ் மற்றும் & தீனா.
மே 2, ஞாயிறு இரவு 8 மணிக்கு STAR VIJAY இல் மட்டுமே BB JODIGAL ஐப் பார்க்கத் தவறாதீர்கள்