நித்தியின் கைலாஷா பின்னணியில் மிகப் பெரிய சூழ்ச்சி வலை!

நித்தியின் கைலாஷா பின்னணியில் மிகப் பெரிய சூழ்ச்சி வலை!

ஆரம்பத்தில் இருந்தே கைலாஷா காமெடி இல்லை .அது மிக சீரிய்ஸ் என்று தெரிந்தே காமெடி செய்தேன்.. நித்தியின் குழந்தை பாலியல் புகார்கள் கவனித்தால் நிறைய ஜோடிப்பு தெரிகிறது.

எந்த அரசும் தனக்கு கீழ்தான் எவரும் இருக்க வேண்டும் என விரும்பும். தனக்கு நிகராக வளர்ந்தால் புலனாய்வு மூலம் உள்புகுந்து எல்லாவற்றையும் மாற்றும் சக்தி எல்லா அரசுக்கும் உண்டு.

அமெரிக்காவில் கஞ்சா ஒழிக்க கஞ்சா காரணம் இல்லை.சர்ச் நிறுவனங்களின் பயம். ஆம் ஹிப்பி கலாச்சாரம் வெகு வேகமாக வளர குடும்ப அமைப்பு சிதையும் என்ற பயம் உடனே கஞ்சாவை தடை செய்து. கைது செய்து. ஹிப்பிகளை இருந்த இடமில்லாமல் ஆக்கினர். இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் அரசியல் எல்லா நாடுகளிலும் உண்டு.

அடுத்து ஓஷோ பேசாமல் இருந்தவரை பிரச்சனை இல்லை.ரஜனீஷ்புரம் என்றை உருவாக்கியுடன் அவர் சீடர்கள் கையாலையே அவர் கண்களை குத்திக்கொள்ள செய்தனர். அல்லது அவரே கூட தப்புக்கணக்கு போட்டிருக்கலாம்.

ஒரு தீவிரவாதிக்காக ஆப்கனையே அழித்த அமெரிக்காவிற்கு நித்தி நாடு பற்றி தெரியாமல் இருக்காது. இந்திய உளவுத்துறைக்கும் தெரியாமல் இருக்காது.

பல நிறுவனங்கள், அரசியல்வாதிகள் தங்கள் பணத்தை வரி விலக்குகாகவும் , ரகசியமாகவும் ஆசிரமங்களில் சேமிப்பது நாம் அறிவோம். பக்தர்கள் கொடுத்து இத்தனைப்பணம் சாத்தியமா என்றால் இல்லை என்றே சொல்லுவேன். எத்தனை கோடி வேண்டும். ஆடம்பர விழாக்களுக்கு..தினம் தினம் ஆடம்பரம் அத்தனை எளிதில்லை.

நிறுவன CSR fund இல்ல்லாவிடில் எந்த என்.ஜி.ஓ வும் சிங்கி அடிக்கும் நிலையில் நித்திக்கு டொனேஷன் என்பதெல்லாம் லுல்லாயி கணக்குதான். எனவே ஆரம்பத்தில் நித்தி தப்பிக்க பெருந்தலைகளின் துணை இருந்திருக்கும் அவர்களே நித்திக்கான பிம்பத்தையும் கார்பரேட் ஸ்டைலில் உருவாக்கி இருக்கலாம். கோவை, பெங்களுர், வட மாநில ஆசிரமங்களின் வளர்ச்சியையும் கவனிக்கலாம். அதெல்லாம் டொனேஷனில் மட்டுமா வளர்கிறது?

ரஞ்சிதா விஷயம் தவிர எனக்கென்னமோ நித்தியிடம் வேறு எதுவும் பெரிதாக அகப்படவில்லை என்றே தோன்றுகிறது. பெற்றோர்கள் விரும்பிதான் ஆசிரமத்தில் விட்டிருக்கிறார்கள். பாலியல் புகார்கள் அனைத்துமே ஒரு மர்மமான முறையில் பூசியும், பூசாமலும் ஏனோ தானோவென்று இருக்கின்றன.. ஆசிரமத்தில் விட்ட குழந்தைகளுக்கு சைல்ட் அப்டக்‌ஷன் என்று பெற்றோர் கேஸ் ஃபைல் செய்து இருப்பதும் ஒரு புரியாத நிலைதான்

இதில் நித்தி மேல் தவறு இல்லாமல் இருக்காது. அதே சமயம் அவர் மீதான குற்றசாட்டுகள் சந்தேகத்திற்கு இடமுள்ளைவையாகவே பார்க்கிறேன்.

அடுத்து கைலாஷா வெப்சைட் முழுக்க மணிக்கணக்கில் அமர்ந்து வாசித்தேன். மிக எளிமையாக தெரிந்தாலும் பிண்ணனியில் மிகுந்த மூளைக்காரர்கள் இருக்கிறார்கள். நித்தி என்பது சீடைகள் என்பெதல்லாம் கண் துடைப்பு.இண்டல்க்சுவல் ஆலோசனைகள் இல்லாமல் இது சாத்தியமில்லை.

வாடிகன், மெக்கா போல் சிவனுக்கு ஒரு இடம், தன் தலைமை என்று சித்தரிக்க பார்க்கிறார். மத்திய அரசு இந்து ஓட்டிலும், அயோத்தியா பிரச்சனைகளிலும் ஓட்டு வங்கி வைத்தே ஆட்சி செலுத்து கிறது. இதில் புது இந்து நாடு என்பதை இந்தியா ஏற்காது. முக்கியமாய் இந்த ஆட்சி ஏற்காது. நித்தி ஐ நா வில் முயற்சிப்பதை அறிந்தே தொடர்ந்து வழக்குகள் போட்டிருப்பதாக வாசித்தேன்

இதில் மிகப்பெரிய சூழ்ச்சி வலைகள் பிண்ணனியில் இருப்பதாக என் உள் மனது சொல்கிறது. பெரும்பாலும் என் இண்ட்யூஷன்கள் சரியாக இருக்கும். அதுதான் எனக்கு பிரச்சனையும்.

பார்ப்போம்..துணிவாக மனதில் உள்ளதை எழுதுகிறோம். இதெல்லாம் கணிப்புதான் நிஜ facts நம் கண்ணுக்கு என்றும் தெரியாது.

நாம் அது வரை வாழறான்யா ..என்று மீம் போட்டு மகிழ்ந்திருப்போம்.

கிருத்திகாதரன்

Related Posts

error: Content is protected !!