அடேங்கப்பா.. எம்புட்டு வளர்ந்துட்டான் இந்த Sun Tv!

இப்போ அப்பளக் கம்பெனி ஆகிப்புட்ட அந்தக் கால விகடன் குழுமத்தில் நான் அப்பாயின்மென்ட் வாங்கியது ஒரேயொரு முறை என்றாலும் டெர்மினேசன் லட்டர் வாங்கியது பல தடவை என்பதை சொல்லி இருக்கிறேன்.. இச்சூழலில் ஹேப்பி பர்த் டே கொண்டாடும் சன்டிவி-க்காக அதை ரீ ஷேர் செய்யறேன்.
அப்படி ஒரு முறை டெர்மினேசன் கடிதாசு வாங்கிய சூழலில்தான் டி டி-யில் மெட்ரோ சேனல் ஓப்பன் ஆச்சு.. அப்போ நான் அடிசினலா மாருதி ஃபாஸ்ட் புட்ஸ் வெற்றிகரமா நடத்திக்கிட்டிருந்த சூழலில் டிடிமெட்ரோ சேனலில் ஒரு ஸ்லாட் வாங்க ஆசைப்பட்டேன்.. அதற்காக அப்போதைய டி டி டைரக்டர் நடராஜனை அடிக்கடிப் போய் பார்த்தாலும் பிரயோஜனம் ஒண்ணுமில்லை.. இத்தனைக்கும் ‘எனக்கு தெரிந்த எம் ஜி ஆர்’ என்ற தலைப்பில் 13 வார எபிசோட்டுகளுக்கன ஆயத்த பணி, ஃப்ண்ட், எக்யூப்மெண்ட் எல்லாம் ரெடி செஞ்சிட்டேன்.. முறைபடி மாருதி புரொடக்சந்ங்க பேர்லே டெல்லிக்கு அப்ளை பண்ணியும் கிடைக்கற மாதிரி இல்லே..
இச்சூழலில்தான் சன் டிவி சக்சேனா ஹன்ராஜை மீட் செஞ்சேன்.. அந்த புள்ளையாண்டான் நம்ம ரைட் அப் & காண்டாக்ட் எல்லாம் தெரிஞ்சதாலே ரொம்ப மரியாதை அறிவாலயத்தில் இருந்த சன் டிவி ஆபீசுக்கு அழைச்சுட்டு போய் என் கான்செப்ட் பத்தி விசாரிச்சார்.. அப்போ சன் டிவியில் ஈவ்னிங் ஜஸ்ட் இரண்டரை மணி நேரம் மட்டுமே (?) நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த இரண்டரை மணி நேரத்தில் அண்ணன் எம் ஜெ ரெகோ நடத்திய ஜோடி பொருத்தம், (இந்நிகழ்ச்சி ஸ்பான்ஸருக்காக 11/2 கிலோ தங்கம் கிடைச்சுது.. அம்புட்டு வெயிட்டான் புரொகிராம்) , டி கே வி ராஜன் நடத்திய சினிமா க்விஸ், ஆனந்த கீதன் நடத்திய வார்த்தை விளையாட்டு, எலிஸபெத் மாலா நடத்திய மழலை நிகழ்ச்சி போன்றவை மட்டுமே ஷூட் செய்யப்பட்டு புதுசாக வழங்கப்பட்டது, மிச்ச நேரம் ராஜ் விடியோ விசனில் இருந்து வாங்கிய காமெடி காட்சிகள் மற்றும் பாடல்களால் நிரப்பட்டு அந்த வீடியோ கேசட் மணிலா-வுக்கு அனுப்பப்பட்டு டெலிகாஸ்ட் ஆகி வந்தது.
அதை எல்லாம் சொல்லி ஆபீசை சுற்றி காட்டினார் சக்சேனா.. அப்போது புரொகிரம் மேனேஜராக ரவி கண்டசாலா மகன்( பெயர் மறந்துடுச்சு) இருந்தார்.. டெக்னிக்கல் ஹெட்-டாக கண்ணன், கேமரா சீஃப் -பாக ஜெயவேல் (இப்போதைய நாளைய இயக்குநர் புரொடியூசர்) போன்றோரை எல்லாம் அறிமுகப்படுத்தி ‘எம் ஜி ஆர் எபிசோட்-டுகளை நம்ம சேனலுக்கே பண்ணுங்க.. அத்தோட வேற எந்த புரொகிராமின் னாலும் இங்கேயே வந்து பண்ணுங்க’ என்றார்..
நான் உடனே ‘எம்ப்ளாயி?வா?’ என்றதும் ‘அப்படி எல்லாம் ஏன் நெனக்கிறீங்க.டைம் கிடக்கறச்சே வாங்க.. யூனிட்டை எடுத்துட்டு போங்க.. ‘ என்ற வார்த்தை எல்லாம் கேட்டு குழம்பி போய் விட்டேன்..
ஆனாலும் அடுத்த வாரம் சன் குழுமத்தில் ஐக்கியமாகி விட்டேன்.. ஆயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபார்- மாச சம்பளம்.. மூன்று நாட்கள் அந்த அலுவலகத்தில் வெட்டியாக பொழுதை கழித்த பின்னர் யூனிட்டை அழைத்துக் கொண்டு ‘க்ரைம் டைம்’ என்ற எபிசோட் ஆரம்பித்தேன்..அதாவது க்ரைம் செய்திகளை ஸ்பாட்டுக்கு போயும், ஆபீசர்களிடம் விசாரிச்சும் பண்ற புரொகிராம்.. இதில் ராத்திரி ரவுண்ட் அப்-கூட விஷூவலா பணினோம்.. அப்போ செங்கல்பட்டு எஸ்.பி-யா ராமநாதன் என்பவர் இருந்தார். அவரை அழைச்சிக்கிட்டு நைட் ரவுண்ட் போனதெல்லாம் சேனலுக்கே தனி மரியாதைக் கிடைச்சிது..
இந்த புரொகிராம் பார்த்து சன்டிவி எம் டி கலாநிதி மாறன் பாராட்டி வேற என்ன செய்யலாம் என்றதும் டூரிஸ்ட் ஸ்பாட், ஷாப்பிங் எல்லாம் பண்ணலாமுன்னு சொன்னதைக் கேட்டுட்டு ரெண்டு நாள் ஆபீஸ் வரலை..
மூனாம் நாள் வந்தவர் கூடவே ஒருத்தரை அழைச்சிகிட்டு வந்தார் – அவர்தான் சுரேஷ் சக்ரவர்த்தி .. அவருடன் வந்தவர் அங்கிருந்த மீட்டிங் ஹாலில் எல்லோரையும் சந்திச்சு ‘ இனி இவர்தான் புரொகிராம் ஹெட்.. இனி யார் என்ன செய்யணுமுன்னாலும் இவரைக் கேட்டு செய்யலாம்’ என்ற ரீதியில் சொல்லி மீட்டிங்க சுரேஷ் சக்ரவர்த்தியிடம் தொடரச் சொல்லிட்டு தன் ரூமுக்கு போயிட்டார்.
சுரேஷ் சக்ரவர்த்தி ‘யார்.. யார் என்ன பண்றீங்க.. ?’ என்றெல்லாம் கேட்டு விட்டு ‘முதல்லே ஆபீசில் ஒரு புரொட்டோகால் கேடர் லிஸ்ட் கொண்டார விரும்பறேன். அதாவது யாருக்கு என்ன பொறுப்பு? எடுத்துக்கிட்ட வேலையை எப்ப முடிப்பீங்க?-ன்னு சார்ட் எல்லாம் போடுங்க.. இந்த சார்ட்டை ஆந்தையார் பொறுப்பேற்று நாளை மறு நாளைக்குள் கொடுக்கணும்’ என்று சொல்லி விட்டு அவரும் கலா ஸ்டைலில் மீட்டிங்கை என் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு கிளம்பிட்டார்.
நான் ஒண்ணும் புரியாம சுரேஷ் சக்ரவர்த்தி சொன்னது என்ன-ன்னு கேட்டு என் க்ரைம் டைம் எபிசோட்டை செம்மைப்படுத்தியவரும் டெக்னிகல் குருவுமான டைரக்டர் எம் ஆர் பூபதி-யிடம் போன் பண்ணி கேட்ட போது ‘புரோகிராம் மேனேஜர் ,போஸ்ட் புரொடக்ஷன், அவுட்டோர் இன்சார்ஜ், கேமரா அலாட்மெண்ட் போன்ற ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு பொறுப்பாளியை நியமிக்கணும்.’ என்றார் அதன்படி லிஸ்ட் தயார் செஞ்சோம்.. இதில் புரொகிராம் டெபுடி மேனேஜர் போஸ்ட்-தான் டாப் என்றாலும் ஆபீசில் ஒவ்வொரு அப்ரூவலுக்கு இந்த சுரேஷ் சக்ரவர்த்தி அல்லது எம் டி கலாநிதியிடம் ஃபைலை தூக்கிட்டு போகும் அட்டெண்டர் ஜாப் என்பதால் அதை அப்போதுதான் ஜாயிண்ட் செய்த ஜோதி என்பவருக்கு ஒப்படைத்தோம்.. தூரன் கந்தசாமி-க்கு போஸ்ட் புரொடக்சன் மேனேஜர் போஸ்ட் கொடுத்த போது ‘ அப்படீன்னா என்ன செய்யணும்.. ஆந்தையாரே?’ என்றவரிடம் ‘எடிட் செய்த அம்புட்டு கேசட்டுக்கும் இன்சார்ஜ்.. கூடவே எடிட்டிங்கில் அதிக நேரம் யாரும் எடுத்துக் கொள்ளாமல் டைம் சார்ட் போட்டு வேலை வாங்க வேண்டும்’ என்றதும் ஹேப்பியாகி பேப்பரில் கட்டம் கட்ட ஆரம்பித்து விட்டார்..
அசிஸ்டெண்ட் புரொகிராம் மேனேஜராக நானும், சேஷையா ரவி என்பவரும் ராப்பகலாக ஆலோசித்து 12 மணி நேர புரொகிராம் லிஸ்ட் தயாரிச்சோம்.. அந்த 12 மணி நேர நிகழ்சிகளே 24 மணி நேரமாக வரும்படியும், அதே சமயம் ரிப்பீட்டர் என்று தெரியாத வகையில் அட்டவணை தயாரித்து மேனேஜர் ஜோதி மூலமாக கொடுத்தனுப்பி அப்ரூவல் வாங்கி ஆரம்பிச்சோம் ஆட்டத்தை..
அப்போ நாங்க ஆடிய ஆட்டத்தாலும் (அடடே..?) வளர ஆரம்பிச்ச சன் டிவி-க்கு இப்போ வயசு 30 என்னும் போது பல நிகழ்வுகள் நினைவுக்கு வருது..
சன் டி வி-க்காக அன்னை தெரசா-வை பேட்டி கண்டது.. விகடன் எம் டி-யின் பர்சனல் வாழ்க்கையை படம் பிடித்தது, இடையில் குங்குமம் இதழில் எழுத வற்புறுத்தப்பட்டு எழுதியதால் கிடைத்த அது, இது எது உள்பட பல நினைவுகள் வந்து போகுது.. A
🌹✍️ ஆந்தை குமார்‘