ஆக டிரம்பர்க்கு நேரம் சரியில்லை!

ஆக டிரம்பர்க்கு நேரம் சரியில்லை!

லகில் நேரம் சரியில்லாதவர்களில் ஹமாஸ் கோஷ்டி, பாகிஸ்தான் பிரதமர், பாமக ராமதாஸர், ராகுலார் என ஒரு வரிசை உண்டு, அதில் சேர்ந்து விட்டார் அய்யா டிரமர். டிரம்பர் கடந்த நான்கு மாதங்களில் கண்ட அவமானம் ஏராளம் அதற்கு அவரின் இயல்பான குணம் பாதி என்றால் மீதி காரணம் எலன் மஸ்க்கர். எலன் மஸ்க் தனி ஒருவன் படத்தில் வரும் அரவிந்த்சாமி போன்ற ஆசாமி , சக்திவாய்ந்த அமெரிக்க அரசாங்கத்தை தன் தொழிலுக்கு சாதகமாக அவர் வளைக்க முயன்றபோது அமெரிக்க நிர்வாகம் எச்சரிக்க ஆரம்பித்தது , டிரம்பரும் நிலமை அறிந்து அவரை தள்ளிவைத்தார் இப்பொது 1972 எம்ஜிஆர் கருணாநிதி போல இருவரும் “ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே” என உக்கிரமாக மோதி கொண்டிருக்கின்றார்கள்.டிரம்பரை முடக்காமல் ஓயமாட்டேன் என சவால்விட்டு சுற்றிக் கொண்டிருக்கின்றார் மஸ்க்.

“பால் ஊட்டி வளர்த்த கிளி” என டிரம்பர் இந்த வேதனையில் பாடிகொண்டிருக்க உலகளவிலும் டிரம்பரின் செல்வாக்கு சரிந்து கிடக்கின்றது, புட்டீன் அன்னாரை வட்ட ராட்டினத்தில் ஏற்றி சுற்றி அனுப்பியதில் அவருக்கு தலை சுர்ரி விட்டது.பெஞ்சமின் நெதன்யாகு டிரம்பரை தன் பணியாளர்களில் ஒருவராக கருதுகின்றார் அதை தாண்டி யோசிப்பதில்லை.இந்தியா பாகிஸ்தானை நொறுக்கிய நான்கு நாட்கள் போரில் பாகிஸ்தான் சரணடைந்து வெள்ளை கொடி காட்டியதை தன் வெற்றியாக டிரம்ப் சொன்னதை அமெரிக்க வியாபார தரப்பே மறுத்து புன்னகைத்ததில் டிரம்பருக்கு ஏக அவமானம்.இப்படி அடிமேல் அடிவாங்கிய டிரம்பரை இந்தியாவின் ஜெய்சங்கர் போலவே அடிக்கடி கனடாவின் பிரதமரும் சீண்டி விளையாடுவார் அந்த கடுப்பு டிரம்பருக்கு இன்னும் அதிகம்.

எனினும் பட்ட காலிலே படும் என்பது போல டிரம்பருக்கு அடுத்த சிக்கல் லாஸ் ஏஞ்சல்ஸ் பக்கம் இருந்து வந்திருக்கின்றது.அங்கு மெக்ஸிகோ பக்கமுள்ள நாடுகளின் கள்ளகுடியேறியக்ள் அதிகம் இவர்கள் ஹிஸ்பானிக் சமூகம் அதிகமுள்ள கூட்டம். இவர்களை நாடுகடத்த காவலர்கள் முயன்றபோது “அமெரிக்காவே குடியேறி நாடு, யாரிடம் கேட்டாய் ஆவணம், யாரை வெளி போக சொன்னாய்?, டிரம்பரின் பாட்டனே வந்தேறி தெரியுமா? எடுடா கொலைவாளை” என பெரும் கலவரம் வெடித்துவிட்டது.

ஒரு கட்டத்தில் காவல்படையால் நிலமையினை சமாளிக்க முடியவில்லை, 1965 திமுக இந்தி எதிர்ப்பு கலவரம் போல லாஞ் ஏஞ்சல் பக்கம் எரிய தொடங்கிவிட்டது.இதனால் தேசிய காவல் படையினை களத்தில் இறக்கிவிட்டிருக்கின்றார் டிரம்பர், அதே நேரம் அமெரிக்காவில் புகுந்திருக்கும் உலகளாவிய உளவுதுறைகள் கலவரத்தை பல இடங்களுக்கு பரப்பி கொண்டிருக்கின்றன‌. வதந்தியும் உண்மையுமாக அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

இதுவே இந்தியாவின் மணிப்பூர் என்றால் “மனித உரிமை, சிறுபான்மை, ஜநா சாசன பிரிவு” என ஓடிவரும் மேற்குலகம் அமெரிக்காவில் நடக்கும் கொடுமைகளை கண்டும் காணாதது போல் அமர்ந்திருக்கின்றது, இதன் பெயர் உலக ஜனநாயக நாகரீக நீதி என நாமெல்லாம் நம்ப வேண்டும்.மோடி எதை செய்தாலும் கொதிக்கும் கூட்டம் இப்போது வாயே திறக்காது. ஆக டிரம்பர்க்கு நேரம் சரியில்லை, அவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மனைவியார் துர்க்கா அம்மையாரிடம் எந்த இந்து கோவிலில் யாகம் செய்தால் நல்லது என விசாரித்தால் தகுந்த பரிகார ஆலோசனை கிடைக்கும் அதை டிரம்பர் முயற்சித்தால் நல்லது

பிரம்மரிஷியார்

error: Content is protected !!