சபரிமலை அரவணை -இனி தினமும் சுடச்..சுட..வழங்க முடிவு!

திருப்பதியில் லட்டு போல சபரிமலையில் வழங்கப்படும் அரவணை எனப்படும் பாயாசம் பிரசித்தி பெற்றது. மண்டல பூஜை காலங்களில் தினமும் 3.25 லட்சம் டின்கள் விநியோகிக்கப்படுகிறது.நடந்து முடிந்த மண்டல பூஜை காலத்தில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு அரவணை விற்பனையாகி உள்ளது.தற்போதைய நிலையில் தினமும் இரண்டரை லட்சம் டின்கள் அரவணை தயாரிக்கும் நிலையில் வசதிகள் உள்ளது இதனால் மண்டல பூஜை காலங்களில் பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய 40 லட்சம் டின்கள் அரவணை முன்கூட்டியே தயாரித்து வைக்கப்பட்டிருக்கும். இதற்காக 200 தற்காலிக தொழிலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் அவர்களுக்கு தங்குமிடம் உணவு வசதி என தயாரிப்பு செலவும் அதிகமாகியது.
மேலும் பிரசாத தயாரிப்பு கூடத்தில் இருந்து மாளிகை புரத்தில் உள்ள அரவணை மற்றும் அப்பம் பிரசாத விற்பனை கவுண்டர்களுக்கு எடுத்து வருவதற்கு டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது .தற்போது கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மலையில் டிராக்டர்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்கூட்டியே அரவணை தயாரித்து இருப்பு வைப்பதை கைவிட தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இனி தினமும் தயாரிக்கப்படும் அரவணைப் பிரசாதம் மட்டுமே நேரடியாக பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் . அன்றைய தேவைக்கேற்ப பிரசாதங்கள் தயாரிக்கப்படும்
இதற்காக நான்கு கோடி ரூபாய் செலவில் உற்பத்திக் கூடம் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் 5 கோடி ரூபாய் செலவில் அரவணை டின்களை எடுத்துச் செல்ல கன்வேயர் பெல்ட் வசதியும் அமைக்கப்பட உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 500 டின்களை எடுத்துச் செல்லும் வகையில் இந்த கன்வேயர் பெல்ட் நிறுவப்பட உள்ளது.

தெங்காசி தேவா