தமிழ் குரல் / AI Voice
சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 22-ம் தேதி ‘வேலைக்காரன்’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இணையதளங்களை கலக்கி வருகிறது. இந்த மோஷன் போஸ்டரில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட கேரக்டர்களின் பெயர்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிய ஆசையா?!
சிவகார்த்திகேயன் – அறிவு
நயன்தாரா – மிருளாயினி
பகத் பாசில் – ஆதி
சினேகா – கஸ்தூரி
பிரகாஷ்ராஜ் – காசி
சதீஷ் – ஹரி
ஆர்.ஜே.பாலாஜி – ஸ்ரீராம்
ரோபோ சங்கர் – சின்னத்தம்பி
தம்பி ராமையா – ஸ்டெல்லா புரூஸ்
வினோதினி – சிவரஞ்சனி
ஒய்.ஜி.மகேந்திரா – நாராயணன்
ரோஹினி -பொன்னி
விஜய் வசந்த் – பாக்யா
சார்லி – முருகேசன்
காளி வெங்கட் – வினோத்
மிமி கோபி – கிஸ்தா
மன்சூர் அலிகான் – கென்னடி
இந்நிலையில் இந்த ‘வேலைக்காரன்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. அதன் எடிட்டிங் பணிகள் முடித்து, தணிக்கைக்கு விண்ணப்பித்திருந்தது படக்குழு. இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள், ‘யு’ சான்றிதழ் அளிக்கவே மிகவும் சந்தோஷமடைந்துள்ளது படக்குழு. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 22-ம் தேதி வெளியீடு என்று திரையரங்குகள் ஒப்பந்த பட்டியலோடு அறிவித்திருக்கிறது படக்குழு.

மேலும் ‘வேலைக்காரன்’ படத்தின் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
