சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம் 2022 மார்ச் 25 உலகம் முழுதும் வெளியாகிறது !

சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம் 2022 மார்ச் 25  உலகம் முழுதும் வெளியாகிறது !

நடிகர் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் ‘டான்’ படத்திற்காக மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். வண்ணமயமான மோஷன் போஸ்டருடன் வந்த முதல் அறிவிப்பு, அதைத் தொடர்ந்து படத்தில் பங்குகொள்ளும் நட்சத்திர நடிகர்களின் அணிவகுப்பு, அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசைக்கொண்டாட்டத்தை தந்த, முதல் சிங்கிள் ‘ஜலபுல ஜங்கு’ பாடல் என இப்படத்தின் ஓவ்வொரு அம்சமும் படத்தின் எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. தற்போது இறுதியாக, தயாரிப்பாளர்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டனர் ஆம்! சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டான்” திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘டாக்டர்’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ள சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்து, உலக ரசிகர்களின் விருப்பமிகு படமாக உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்திற்கான வர்த்தக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் படத்தின் அழகான கெமிஸ்ட்ரியை தொடர்ந்து, சிவகார்த்திகேயனும், பிரியங்கா அருள் மோகனும் ‘டான்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். மாநாடு படத்தில் தனது பிரமாண்டமான நடிப்பின் மூலம் திரையுலகையே அசத்திய எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் ‘டான்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவில் அனிருத் (இசை), KM.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டூனி ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J – AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு ( இணை தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சிபி சக்கரவர்த்தி இயக்குநராக தனது திரைப்பயணத்தை துவங்கும் “டான்” திரைப்படத்தினை Lyca Group தலைவர் சுபாஸ்கரன் Lyca Productions சார்பில், SK Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

error: Content is protected !!