மோடி பட்ஜெட் 2022-23: என்ன விசேஷம்? எது ஏமாற்றம்?

மோடி பட்ஜெட் 2022-23: என்ன விசேஷம்? எது ஏமாற்றம்?

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, வருமான வரி உச்ச வரம்பு மாற்றமின்றி 2.5 லட்சம் ரூபாயாக தொடர்கிறது என்றார்.

2022–-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2வது முறையாக தாக்கல் செய்திருக்கும் 2–வது காகிதமில்லா பட்ஜெட் இது. மகாபாரதத்தை மேற்கொள் காட்டி அவர் தன் உரையைத் துவக்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவின் வளர்ச்சிக்கு வருமான வரி செலுத்துபவர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். வரிசெலுத்துவோர் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன். கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி 2 ஆண்டுகள் அவசாகம் வழங்கப்படும். ” என்றார்

மேலும் இந்த நிதிநிலை அறிக்கை சிறப்பு அம்சங்கள்

மன அழுத்தத்தை குறைக்க தொலைபேசி மூலம் ஆலோசனை

மொபைல் சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றுக்கு இறக்குமதி வரியில் சலுகை.

குடைக்கான இறக்குமதி வரி 20%ஆக உயர்வு.

வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு உதவ ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

மாற்றுத் திறனாளி குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோருக்கு வருமான வரியில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது

ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களும் TDS சலுகை

ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர்களுக்கான TDS 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும்

மாநிலங்களுக்கு உதவ 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

கூட்டுறவு நிறுவனங்கள் செலுத்தும் குறைந்தபட்ச மாற்று வரி விகிதம் 15% ஆக குறைக்கப்படும்

அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூ.7.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிடவும் 35.4% அதிகம்.

ஆன்லைனில் இணையும் தபால் & வங்கித்துறைகள்.தபால் அலுவலக கணக்கிலிருந்து வங்கி கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி.

1.5 லட்சம் அஞ்சலகங்கள், பொதுத்துறை வங்கிகள் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.தபால் துறையை, வங்கிகள் துறையோடு ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை

மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

நாட்டில் 75 மாவட்டங்களில் பரிட்சார்த்த முயற்சியாக இ-பேங்கிங் அறிமுகம் செய்யப்படும்

ஏர் இந்தியா பங்குகள் விற்பனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டம், வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.

பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்

விர்ச்சுவல் மூலதன சொத்துக்கள் மீதான வரியில் 1% TDS வழங்கப்படும்

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 68 சதவீதம் ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை

இ பாஸ்போர்ட் திட்டம் விரைவில் அறிமுகம்

2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு பிரத்யேக மையங்களில் பேட்டரியை மாற்றிக் கொள்வது தொடர்பாக திட்டம் கொண்டு வரப்படும்.

ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்படும்.

நடப்பாண்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும்

பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை

வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை

ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டத்தின் கீழ் புதிதாக 200 டிவி சேனல்கள்

சிறு குழந்தைகள் நலனுக்காக, நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.60 ஆயிரம் கோடியில் 18 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மனரீதியாக சிகிச்சையளிக்க மையங்கள் உருவாக்கப்படும்

மத்திய பட்ஜெட்: ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்

நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்

25 ஆண்டுகளை இலக்காகக்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், “வரும் நிதியாண்டில், உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை வரும்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டில் 22,000 கி.மீ. தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2023-க்குள் 2,000 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

‘‘ஸ்டார்ட் அப்களுக்கான வரிச்சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் களுக்கான வரிச் சலுகைகள் அடுத்த ஆண்டு மார்ச் வரை இணைக்கப்படும்.

மெய்நிகர் டிஜிட்டல் சொத்தைப் பரிசாகப் பெற்றால் வாங்குபவருக்கு வரி விதிக்கப்படும். டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களின் வரி 15% ஆகக் குறைப்பு

மாநில அரசு ஊழியர்களின் என்பிஎஸ் கணக்கில் முதலாளிகள் செலுத்தும் பங்கின் மீதான வரி விலக்கு வரம்பை 14% ஆக உயர்த்த முன்மொழிகிறது.

கூட்டுறவு சங்கங்களுக்கு மாற்று குறைந்தபட்ச வரி 15% ஆக குறைக்கப்படும்.

கார்ப்பரேட் கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.

கணக்கில் காட்டாத சொத்து சலுகை ரத்து :வருமான வரி சோதனையின்போது கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படுகிறது.” இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதனிடையே இந்த மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரையில் தனிநபர்களுக்கான வருமான வரியில் செய்யக்கூடிய மாற்றங்கள் எப்போதும் பெரிதும் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்தவகையில் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலும் இதே எதிர்ப்பார்ப்பு இருந்தது. கடந்த முறை ‘ஓல்டு ரெஜிம், நியூ ரெஜிம்’ என 2 திட்டங்களாக மாற்றப்பட்டது. இருந்தாலும் 5 லட்சத்துக்கு குறைவாகவும் வரி விதிக்கும் நடைமுறை உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு மேல் வரி விதிக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. பணவீக்கத்துக்கு ஏற்ப 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் வரையிலாவது உயர்த்தப்படலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது.

அதுபோலவே 80சி என்ற விரி விலக்கு உச்ச வரம்பு 1.5 லட்சமாகவே நீண்டகாலமாக உள்ளது. மத்திய அரசு தனக்கான பல திட்டங்களில் பணவீக்கத்தின் அடிப்படையில் உச்ச வரம்புகளை மாற்றியுள்ளது. பிஎப், இஎஸ்ஐ என பலவற்றிலும் உச்ச வரம்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் 80சி திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. இதை இந்த ஆண்டு செய்தே ஆக வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் எதுவுமே இடம் பெறவில்லை. தனிநபர்களுக்கான வருமான வரி மற்றும் அதற்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது அல்லாமல் தனிநபர் வருமான வரி தொடர்பான சில அறிவிப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலர், ஊனமுற்ற குழந்தைகளிடமிருந்து காப்பீடு செய்வதற்கு வரிச்சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!