உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி :தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி :தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

ளவேனில் வாலறிவன், தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த துப்பாக்கி சூடுதல் வீராங்கனை. 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி பிறந்தவர். இளவேனில் 2018ம் ஆண்டு ஐஎஸ்எஸ்எஃப் ஜீனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். தங்கப்பதக்கத்தையும் வென்றார். 2019ம் ஆண்டு நடைபெற்ற உலக பல்கலைக்கழக போட்டிகளில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.2019ம் ஆண்டில் இவர் முதல் ஐஎஸ்எஸ்எஃப் 10 மீட்டர் ஏர் ரைபிஃள் உலக கோப்பையை வென்றார். ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்றார். இவருக்கு 2022ம் ஆண்டு அர்ஜீனா விருது வழங்கப்பட்டது.

2019ம் ஆண்டு மியூனிச்சில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நான்காவது இறுதிச்சுற்றை நிறைவு செய்தார். இவரது முதல் தனிநபர் தங்க பதக்கத்தை சீனியர் பிரிவில் 250.5 புள்ளிகள் பெற்று வாங்கினார். இவர் இரண்டு ஜீனியர் உலக கோப்பைகளை வென்றுள்ளார். அவை தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் ஆகும்.

இந்தாண்டு ஜீலை 29ம் தேதி உலக பல்கலைகழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீராங்கனையான இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் தங்க பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படுபவர் இளவேனில் வாலறிவன். இவர் 2020ம் ஆண்டு 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் டோக்கியோவில் நடந்த போட்டியில் இந்தியாவின நம்பிக்கையாக பார்க்கப்பட்டார்.

இந்நிலையில் உலகக்கோப்பை துப்பாக்கிச்சூடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார்.இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் 252.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். பிரேசிலில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் வென்ற இளவேனிலுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Related Posts

error: Content is protected !!