பாகிஸ்தான் இடைக்கால பிரதமரானார் ஷாஹித் ககான் அப்பாஸி!!

பாகிஸ்தான் இடைக்கால பிரதமரானார் ஷாஹித் ககான் அப்பாஸி!!

பாகிஸ்தானின் பெட்ரோலிய துறை அமைச்சரான சாகித் கான் அப்பாஸி பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரிப் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் வரை சாகித் கான் பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி இழந்தார். அவருக்கு பதிலாக அவரது தம்பியும் பஞ்சாப் மாகாணத்தின் முதல்வருமான ஷெபாஸ் ஷெரிப் பிரதமராகப் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஷெபாஸ் ஷெரிப் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இல்லை. எனவே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால பிரதமாக யாரை அமர்த்துவது என்பதை தீர்மானிக்க நவாஸ் ஷெரிப் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இறுதியில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பெட்ரோலிய துறை அமைச்சருமான சாகித் கான் அப்பாஸ் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்க ப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சிக்கூட்டத்தைத் தொடர்ந்து கடசியின் நாடாளுமன்றக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திலும் இடைக்கால பிரதமராக சாகித் கான் அப்பாஸ் தேர்வு உறுதி செய்யப்படவேண்டும். சாகித் கான் அப்பாஸ் தேர்வு பற்றிய தகவல் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. நவாஸ் நவாஸ் ஷெரிப் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்றும், கட்சியின் நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.