🔥முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சிக்கு ஆப்பு வைக்கும் ஸ்நேக் பாபு ஆகிய சேகர்!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, உங்கள் தலைமையிலான அமைச்சரவைச் செயல்பாடுகள் குறித்து அரசியல் நோக்கர்கள் பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதில் சோகமான விஷயம் என்னவென்றால், உங்கள் கேபினட்டில் யாருக்கும் திருப்திகரமான ‘மார்க்’ வழங்க முடியவில்லை என்பதுதான். அதே சமயம், உங்கள் அமைச்சரவையில் மிகவும் மட்டமான, கொஞ்சமும் தகுதியில்லாத, ஊடகங்களைக் கேவலமாக நடத்தும் ஒரு ஜீவன் இருக்கிறார் என்றால், அது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுதான் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.
🐍 ‘ஸ்னேக் பாபு’வால் ஆட்சிக்கு வந்த டேமேஜ்!
முன்னாள் அ.தி.மு.க. ரத்தம் கொண்ட இந்தச் சேகர்பாபு, திட்டமிட்டே திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுவிட்டதால், தமிழகமெங்கும் நிலவும் பக்தர்கள் கோபம், சோகம், சாபம் ஆகியவை உங்கள் கவனத்துக்குப் போகாமல் தடுக்கப்படுகின்றன என்பதுதான் நிதர்சனம். அதுமட்டுமல்லாமல், பொது மேடைகளில் நீங்களே அவரைப் பாராட்டிப் புளகாங்கிதப்படும் போக்கெல்லாம், தமிழக முதல்வரான உங்களுக்குப் படு டேமேஜ் சாரே!
இந்த ‘ஸ்னேக்’ சேகர் பாபுவால் அசிங்கப்பட்ட, அவமானப்பட்ட, வெட்கப்பட்ட, வேதனைப்பட்ட உங்கள் கேபினட் சகாக்கள் தொடங்கிப் பிரபலங்கள் பட்டியல் நீளமானது. அதையெல்லாம் நீங்கள் அறியாவிட்டாலும் பரவாயில்லை…!

🚨 கார்த்திகை தீப விவகாரமும், மதுரை ஐகோர்ட் கண்டனமும்!
ஆனால், சமீபத்திய கார்த்திகை தீபத் திருவிழா விவகாரத்தில் நடந்த குளறுபடியைத் தயவுசெய்து சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கலைஞர் வாரிசான உங்கள் ஆட்சிக்கு –– அதுவும் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர இருக்கும் இந்த இக்கட்டான சூழலில் –– மதுரை ஐகோர்ட்டால் ஏற்பட்ட அவப்பெயர், மிகப் பெரியது.
மதுரை ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை நிறைவேற்றத் தவறியதால்தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டம்-ஒழுங்குச் சிக்கல் ஏற்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவை வந்தது.
அரசு தரப்பின் வாதங்களைப் புறக்கணித்த நீதிபதிகள் அமர்வு, “மாநில அரசு கடமையைச் செய்யத் தவறியதால்தான் சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்புக்கு அவர் (தனி நீதிபதி) உத்தரவிட நேர்ந்தது” என்று வெளிப்படையாகக் கூறியது, உங்கள் ஆட்சிக்கு நேர்ந்த படுமட்டமான விமர்சனம்!
🎯 முதல்வர் அவர்களே, உஷார்!
இந்த விவகாரங்களால், இந்து பண்டிகைகள் மற்றும் பாரம்பரியங்கள் விவகாரத்தில் உங்கள் அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற பிம்பம் ஆழமாகப் பதிகிறது. இந்த இமேஜ், அடுத்த சி.எம். ரேஸில் நீங்கள் ஜெயிக்க சான்ஸ் கம்மி என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது என்பதை உங்களால் புறக்கணிக்க முடியாது.
முத்துவேல் கருணாநிதி அவர்களே, தயவுசெய்து இந்த உண்மை நிலவரத்தை, உங்கள் மனைவி துர்கா ஸ்டாலின் அம்மாவிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் அரசுக்குச் சேதத்தை ஏற்படுத்தும் இந்தச் ‘சேகர்பாபு’ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையேல், மக்கள் மன்றத்தில் உங்கள் ஆட்சிக்குக் கிடைத்த இந்த அவப்பெயர், வரும் தேர்தலில் பெரும் விலையாக மாறும்!
நிலவளம் ரெங்கராஜன்


