பல்வேறு மாநிலங்களுக்கான 68 ஐகோர்ட் நீதிபதிகள் தேர்வு!

பல்வேறு மாநிலங்களுக்கான 68 ஐகோர்ட் நீதிபதிகள் தேர்வு!

கோர்ட்டுகளில் நீதிபதிகளாக நியமிக்கப்பட 68 பேருடைய பெயர்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கொண்ட தேர்வுக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான 3 நீதிபதிகளைக் கொண்ட தேர்வுக்குழு அறுபத்தி எட்டு பேரை பரிந்துரை செய்திருப்பது புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

கடந்த ஒன்றாம் தேதி கூடிய சுப்ரீம் கோர்ட் தேர்வுக்குழு மொத்தம் 112 பேருடைய பரிசீலித்து அதில் 68 பேரை நீதிபதிகளாக நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த 68 பேரும் 12 மாநிலங்களில் ஐகோர்ட்களுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

நீதிமன்ற தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ள அறுபத்தி எட்டு பேரில் ஒருவர் ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த பெண் .அவர் பெயர் மார்லி வன்குங். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் அசாம் மாநில ஐகோர்ட்நீதிபதியாக நியமிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மிசோரம் மாநில ஷெடயூல்டு வகுப்புப் பெண் ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்கவுள்ளது இதுவே முதல் தடவையாகும்.

தற்போது சுப்ரீம் கோர்ட் தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ள 68 நீதிபதிகளில் மொத்தம் 10 பேர் பெண்கள். அந்த வகையில் ஒரே நேரத்தில் மாநில 10 பெண்கள் ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

புதிதாக ஐகோர்ட் நீதிபதிகள் பதவி ஏற்க உள்ள 12 மாநிலங்கள் விபரம் வருமாறு

1.அலகாபாத் 2.ராஜஸ்தான் 3.கல்கத்தா 4.ஜார்கண்ட் 5.ஜம்மு மற்றும் காஷ்மீர். 6.மெட்ராஸ் 7.மத்தியப் பிரதேசம் 8.கர்நாடகம் 9.பஞ்சாப் மற்றும் அரியானா 1௦.கேரளம் 11.சத்தீஷ்கார் 12.அசாம்.

error: Content is protected !!